குடிபோதையில் கீழே விழுந்து தொழிலாளி பலி
5/8/2025 3:32:50 PM
ஆவடி: ஆவடியை அடுத்த பட்டாபிராம், வள்ளலார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (50). இவர் கேஸ் ஏஜென்சி ஊழியர். இவர் கடந்த 2-ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு நடந்து வந்தார். பட்டாபிராம், சிடிஎச் சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில் பாலமுருகன் வந்தபோது குடிபோதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதனால் தலையில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பாலமுருகன் பரிதாபமாக பலியானார்.