இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டுத்தர வேண்டும் : டிஐஜியிடம் விவசாயி முறையீடு

5/8/2025 3:11:16 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் அம்மன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (36). விவசாயியான இவர் நேற்று சேலம் காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் சென்று மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது:என் மனைவியை மிரட்டி, கட்டாயப்படுத்தி என் மாமனார், மாமியார் துணையோடு ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால், எனது குடும்பமே பெரும் கவலையில் மூழ்கியுள்ளது. எனது குடும்பத்தின் மானமே போய்விட்டது. எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடமிருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்.மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மேலும் பல குடும்பங்களை பிரித்து தன் சொந்த விருப்பத்திற்காக பயன்படுத்திக் கொள்வார். எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட டிஐஜி புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் தெரிவித்துள்ள ராமகிருஷ்ணனுக்கும், தேன்மொழி என்பவருக்கும் 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்பத்தகராறில் தேன்மொழி பிரிந்து சென்றுள்ளார். அப்போது, ராமகிருஷ்ணன் குழந்தையை மறைத்து வைத்ததால், தேன்மொழி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 இதையடுத்து, அவர் குழந்தையை தன்வசம் பெற்றுக் கொண்டார்.இதுதொடர்பாக விசாரிப்பதற்காக சென்ற இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேன்மொழி புகார் தெரிவித்து, கடந்த மாதம் 10 மற்றும் 20ம் தேதிகளில் உயரதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். உடனே, தேன்மொழியின் பெற்றோரை கைக்குள் போட்டுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து அவர்களை சரிகட்டியுள்ளார். இதையடுத்து, தேன்மொழி தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார். பின்னர், தேன்மொழியை ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் சில
  • ‘ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்றனர்’குழந்தை தொழிலாளராக இருந்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபார சாதனை



  • மாவட்ட அளவில் காவலாளி மகள் 3-வது இடம்சிஏ படிக்க ஆசை



  • திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரமம் பள்ளி மாணவிகள் உயிர்வேதியியலில் முதல் இரு இடம் பிடித்து சாதனை



  • காஞ்சி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை சீயோன் பள்ளி பிடித்தது



  • பெரியார் நகர் பள்ளி மாணவி மாவட்டத்தில் 2வது இடம்



  • கலெக்டராவதே என் லட்சியம் 2ம் இடம் பிடித்த மாணவன் பேட்டி



  • மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளி மாணவன் சமஸ்கிருதத்தில் மாநிலத்தில் 3வது இடம்



  • சென்னையில் சமஸ்கிருதத்தில் முதலிடம் பிடித்த மாணவி



  • மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா



  • சமூக விரோதிகளின் கூடாரமாகும் அரும்புலியூர் சமுதாய கூடம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]