வார்த்தைகள் புரியாவிட்டால் அது பாடலே இல்லை இசையமைப்பாளர் கருத்து
5/8/2025 3:05:47 PM
சர்வானந்த், அனன்யா, அஞ்சலி நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ மற்றும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘பொன்மாலை பொழுது’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் சத்யா. அவர் கூறியது:மெலடி மெட்டில்தான் பாடல்களுக்கு இசை அமைத்து வந்தேன். ‘காஞ்சனா 2’ படத்துக்கு இசை அமைத்த சில்லாட்டா பில்லாட்டா பாடல் என்னை அடிமட்ட ரசிகர்கள் வரை அறிமுகப்படுத்திவிட்டது. அதற்கு காரணம் இயக்குனர் ராகவா லாரன்ஸ்தான். மெலடிதான் எனக்கு தெரியும் என்ற எண்ணத்தை இப்பாடல் மாற்றி அமைத்துவிட்டது. மெலடி, வெஸ்டர்ன், டிஸ்கோத்தே என எந்த பாணியில் பாடல் அமைந்தாலும் கண்டிப்பாக வார்த்தைகள் கேட்கும்படி இருக்க வேண்டும்.
புரியும்படி இருக்க வேண்டும். அசுரகுலம், மானே தேனே பேயே, கிட்னா உள்ளிட்ட படங்களுக்கு தற்போது இசை அமைத்து வருகிறேன். ஒரே படத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இசை அமைப்பாளர்கள் தற்போது பணியாற்றுகின்றனர். இப்படி பணியாற்றுவது இயக்குனர் மீதிருக்கும் நட்பால் அமைவது. இந்த பாணியிலான படங்கள் எப்போதாவதுதான் வரும். ஒவ்வொரு இசை அமைப்பாளர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. அது சோலோவாக இசை அமைக்கும்போதுதான் வெளிப்படும். இவ்வாறு சத்யா கூறினார்.