இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெண் தொண்டரை ஏமாற்றிய விவகாரம்: மகளிர் ஆணைய சம்மனுக்கு தடை கேட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ ஐகோர்ட்டில் மனு

5/8/2025 2:55:22 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் பெண் தொண்டர் ஒருவருடன் நெருங்கி பழகிவிட்டு அவரை கைவிட்டு  விட்டதாக அக்கட்சியின் எம்எல்ஏவும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான குமார் விஸ்வாஸ் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடை விதிக்கக்கோரி விஸ்வாஸ் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் மீது அக்கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். தன்னிடம் நெருங்கி பழகிவிட்டு தற்போது கைவிட்டு விட்டதாக டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க விஸ்வாசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. சம்பந்தப்பட்ட பெண்ணுடன் உறவு இருந்ததை இதுவரை விஸ்வாஸ் மறுக்கவில்லை. ஆனால் மகளிர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமும் அளிக்கவில்லை.

இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி கவர்னர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு மகளிர் ஆணைய தலைவர் பர்கா சிங் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் மகளிர் ஆணையத்தின் நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி விஸ்வாஸ் சார்பில் அவரது வக்கீலும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். விஸ்வாஸ் குறித்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் மகளிர் ஆணையத்தில் ஆஜராக தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை எனவும், நோட்டீஸ் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் குமார் விஸ்வாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஒருவர் போலி கல்வி சான்றிதழ் புகாரில் சிக்கியுள்ளார். தற்போது மற்றொரு எம்எல்ஏ பெண் விவகாரத்தில் சிக்கியிருப்பது அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • ‘பாஜ அரசு சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல’ பிரதமர் மோடி பேட்டி



  • கேரள பெண் அமைச்சருக்கு 10ம் தேதி திருமணம்



  • டெல்லி மீது மோடி அரசுக்கு அக்கறையில்லை ராஜ்நாத்சிங்கிடம் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்



  • சம்பள உயர்வு கோரி ஆந்திரா, தெலங்கானாவில் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : 3வது நாளாக மக்கள் தவிப்பு



  • டெல்லியில் ஒரே நாளில் 105 இடங்களில் தீ விபத்து



  • முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மக்களவை 3 நாள் நீட்டிப்பு



  • போலீஸ் கமிஷனர்-ஐகோர்ட் பதிவாளர் திடீர் ஆலோசனை : ஜெயலலிதா வழக்கில் மே 11ல் தீர்ப்பு? இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்பதால் பரபரப்பு



  • ராகுல் மீது அவதூறு வழக்கு சுப்ரீம் கோர்ட் தடை



  • மது பார் ஊழல் விவகாரத்தில் விசாரணை கேரள அமைச்சர் மாணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம்



  • அரிய தவறு... அறிந்தே தவறு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]