இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு

5/7/2025 3:05:33 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

லண்டன்: இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கியது.   இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு துவங்கியது முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 4.50 கோடி பேர் ஓட்டுப்போடுகின்றனர். இங்கு மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   இந்த தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் சார்பில் தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூனும், பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி சார்பில் எட்மிலிபேண்ட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதுவரை 7 முறை கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதில் கன்சர்வேட்டிவ், லேபர் கட்சிகள் சம பலத்துடன் இருப்பதாக 3 கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கன்சர்வேட்டிவ் சுமார் 1 சதவீதம் முன்னிலை வகிப்பதாக 3 கருத்து கணிப்புகளும், சுமார் 2 சதவீதம் லேபர் கட்சி முன்னிலை வகிப்பதாக ஒரு கருத்துக்கணிப்பும் ஆருடம் கூறியுள்ளன.மேலும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 284 இடங்கள் வரை கிடைக்கும் எனவும், லேபர் கட்சிக்கு 263 இடங்கள் வரையும், ஸ்காட்லாந்து தசேிய கட்சிக்கு 48, சுதந்திர ஜனநாயக கட்சிக்கு 31 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.யார் வெற்றிபெற்றாலும் வித்தியாசம் குறைந்தளவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காதபட்சத்தில் சிறிய கட்சிகளின் ஆதரவைபெற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.சுதந்திர ஜனநாயக கட்சியின் ஆதரவை தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பெறுவார் என தெரிகிறது.

கடந்த முறை இந்த கட்சியின் ஆதரவை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், லேபர் கட்சி தலைவரும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டுவர்.கடும்போட்டி நிலவி வரும் நிலையில், பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியர்களின் ஆதரவை பெறுவதில் தீவிரம் காட்டினார். ஏனென்றால் இங்கிலாந்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இந்தியர்கள் உள்ளனர். நிலையான, உறுதியான ஆட்சியை கன்சர்வேடிவ் கட்சியால் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ள கேமரூன், வருமான வரி குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.இந்நிலையில், இன்று நடைபெறும் வாக்குப்பதிவின் முடிவுகள் நாளை வெளியாகிறது. யார் ஆட்சி அமைப்பார்கள் என அப்போது தெரியவரும்.

மேலும் சில
  • சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி, நேரு சிலை : இந்திய அரசு வழங்குகிறது



  • அமெரிக்காவில் கடும் சூறாவளி இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி



  • இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : டேவிட் கேமரூனுக்கு வெற்றி வாய்ப்பு : இன்று மாலை முடிவு தெரியும்



  • எபோலா பலி எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது : உலக சுகாதார நிறுவனம் தகவல்



  • நேபாளத்துக்கு நிதி திரட்டும் அமெரிக்கவாழ் இந்தியர்கள்



  • மே 8 - உலக செஞ்சிலுவை சங்க தினம்: மக்களுக்கு உதவும் தன்னலமற்ற அமைப்பு



  • இங்கிலாந்தில் நாளை பொதுத்தேர்தல் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது கருத்துக்கணிப்புகள் ஆருடம்



  • இத்தாலியில் படகு விபத்து: கடலில் மூழ்கி 40 பேர் பலி



  • ஈராக்கில் பிரதமர் அலுவலகம் மீது குண்டுவீச்சு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]