இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பணி பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் டாக்டர்கள் ஸ்டிரைக்

5/2/2025 12:24:33 PM
ஆவின் நிர்வாகத்தில் நவீன கொள்ளை : பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை எல்லா கோப்புகளையும் எனக்கு அனுப்ப வேண்டும்: கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் திடீர் கண்டிப்பு

திருச்சி: டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் இன்று 10 ஆயிரம் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு 50 ஆயிரம் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கிளினிக், நர்சிங் ஹோம் மற்றும் பெரிய ஆஸ்பத்திரிகள் என 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்திய மருத்துவ சங்கத்தில்(ஐஎம்ஏ) மட்டும் 3800 ஆஸ்பத்திரிகள்  பதிவு செய்யப்பட்டு உள்ளது.  25 ஆயிரம் டாக்டர்கள் பதிவு செய்து உள்ளனர்.இவர்களுக்கு பணியின்போது பாதுகாப்பு வேண்டும், ஆஸ்பத்திரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை(48/2008ஐ) நடைமுறைப்படுத்த வேண்டும்.

பணியின்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே டாக்டர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். உடனே கைது செய்யக்கூடாது. வழக்கு தொடருவதற்கு முன் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(2ம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளை ஒரு நாள் மூடி டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்வது எனதலைவர் ரவீந்திரன் தலைமையில் நடந்த தமிழ்நாடு ஐஎம்ஏ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படவில்லை.

 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவை என்றால் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மற்ற எந்த சிகிச்சையும் இன்று நடைபெறவில்லை.வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வழங்கும் பணியை நர்ஸ்கள் மேற்கொண்டனர். டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் இன்று அரசு ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தமிழகத்தில 4 ஆயிரம் பல் மருத்துவ மனைகள் உள்ளன. அவையும் இன்று ஸ்டிரைக்கில் பங்கெடுத்துஉள்ளதாக பல் டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் அருண் தெரிவித்தார்.

மேலும் சில
  • சட்டப் படிப்பு: 8ம் தேதி முதல் விண்ணப்பம்



  • ஆவின் நிர்வாகத்தில் நவீன கொள்ளை : பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை



  • நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்



  • பாலத்தில் இருந்து பைக் விழுந்தது கணவன், மனைவி மகன் பரிதாப பலி



  • ஆவின் பால் டப்பாக்களை திருடும் கும்பல் கமிஷனர் அலுவலகத்தில் முகவர்கள் புகார்



  • சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் : குறுந்தொழில் முனைவோரிடம் மு.க.ஸ்டாலின் உறுதி



  • சுவாமிமலை முருகன் கோயிலில் சீர்வரிசை பொருட்களுடன் வந்து அகத்தியரை வழிபட்ட பக்தர்கள்



  • கோடைவெயில் தாக்கம்: பூக்கள் விலை விர்..



  • கூடுவாஞ்சேரியில் மதிமுக சார்பில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு



  • காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பு



Facebook

Twitter

ஆன்மிகத்தில் மூழ்கிய மற்றொரு கவர்ச்சி நடிகை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]