இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தொழில்முனைவோர் பயிற்சி திட்டம் : அமெரிக்கா பயணத்திற்கு தமிழக மாணவி தேர்வு

5/1/2025 2:53:07 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

நாகர்கோவில்: குமரி மாவட்டம், இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நஸீம். பொறியியல் மேற்படிப்பு பயின்று வரும் இவர் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்திற்காக தேர்வு பெற்றுள்ளார். இந்தியாவின் சார்பில் ர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8 பேர் குழுவில் ஒருவராக இவர் தேர்வு பெற்றுள்ளார். கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மோத்வனி ஜடேஜா பவுண்டேஷன் என்ற அமைப்பு, ராஜீவ் பெல்லோஷிப் என்ற திட்டத்தினை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து  சாதனையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உலக தரத்தில் தொழில் முனைவோர் பயிற்சி அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கம்.  அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் அமைந்துள்ள கூகுள், பேஸ்புக்,  இபே, ஆட்டோ டெஸ்க், டுவிட்டர் போன்ற நிறுவனங்களில் மே 10 முதல் 30 வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது.  இந்த நிறுவனத்தின் தலைவர்களை சந்தித்து பேசும் அரிய வாய்ப்பும் இந்த திட்டத்தில் உள்ளது.

மாஷா நாகர்கோவிலில் ‘மாஷா ஆக்கத்திறன் மையம்’  என்ற சேவை அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த ஆக்கத்திறன் மையத்தில்  பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களில் 4 பேர்  அறிவியல் படைப்பாற்றல் போட்டிகளில் தேசிய விருதுகளை பெற்றுள்ளனர். இது தொடர்பாக மாஷா கூறுகையில், ‘எனது இந்த ஆக்கத்திறன் மையத்தினை  தேசிய அளவில் கொண்டு செல்லும் முயற்சிக்கு இந்த  சிலிக்கான் வேலி  பயிற்சி  திட்டம்  பேருதவியாக  அமையும். இதன் மூலம் மணவர்களிடையே  அறிவியல் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் எனது முயற்சி மேலும் சிறப்படையும்’ என்றார். மாஷா, தனது  9 வயதில் அறிவியல் மாடல்களை உருவாக்க தொடங்கியவர். இதுவரை 12 தொடர் கண்டு பிடிப்புகளை நிகழ்த்தி, அதற்காக 2 சர்வதேச விருது, 5 தேசியவிருது, 2 ஜனாதிபதி விருதுகளை பெற்றுள்ளார்.  அப்போதைய ஜனாதிபதி  அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர்  நரேந்திர மோடி ஆகிய தலைவர்களிடம்  தனது கருவி குறித்து  செயல்விளக்கம்  செய்து காண்பித்து  பரிசு, பாராட்டுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்



  • திருநங்கைகள் உரிமைகள் மசோதா மக்களவையிலும் வெற்றி பெறும் : திருச்சி சிவா எம்.பி. பேட்டி



  • செம்முனீஸ்வரர் கோயில் விழாவில் 4 ஆயிரம் ஆடுகள் பலி



  • பணி பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • பாக்கெட் சாராயம் விற்பனை: கும்பகோணத்தில் படுஜோர் விருது பெற்ற மாவட்டத்தில் அவலம்



  • நெடுங்குன்றம் ஊராட்சியில் போர்வெல் மூலம் குடிநீர்



  • மதுராந்தகம் அருகே தறிகெட்டு ஓடிய வேன் 2 கார்கள் மீது மோதல் : 7 பேர் காயம்



  • திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக தொழிற்சங்கம் மே தின பேரணி



  • அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கொலை: அன்புமணி பேச்சு



  • ரயில் மோதி தொழிலாளி பலி



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]