இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்

4/30/2015 3:43:31 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

மோகா: பஞ்சாபில் ஓடும் பஸ்சில் சிறுமியிடம் ஒரு கும்பல் சில்மிஷத்தில் ஈடுபட்டது. இதை தடுத்த சிறுமியின் தாயாரை தாக்கியதோடு, சிறுமியை பஸ்சில்  இருந்து அக்கும்பல் வெளியே தள்ளியது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம், மோகா  மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஷில்பா(14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று மாலை தனது தாய், இளைய சகோதரன் ஆகியோருடன் குருத்வாராவுக்கு பஸ்சில்  சென்று கொண்டிருந்தாள். பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில், பஸ்சில் இருந்த வாலிபர்கள் சிலர் ஷில்பாவிடம் சில்மிஷம் செய்தனர்.  நடத்துனர், டிரைவரிடம் உதவி கேட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதை அவளது தாய் தடுத்தார்.ஆத்திரமடைந்த அந்த கும்பல், ஷில்பா மற்றும் அவரது  தாயை பஸ்சில் இருந்து தள்ளிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஷில்பா பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தாயார் படுகாயம் அடைந்தார். இந்நிலையில்,  பஸ் நிற்காமல் சென்று விட்டது.

சிறிது தூரம் சென்றபின் சிறுமியிடம் சில்மிஷம் செய்த கும்பல் பஸ்சில் இருந்து இறங்கி தப்பிவிட்டது.சாலையில் விழுந்து கிடந்த சிறுமியின் தாயாரை  அவ்வழியே சென்றவர்கள், அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் அனைவரும் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு நன்கு அறிந்தவர்கள் என  விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நடத்துனர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். பஸ்சில் இருந்து தள்ளிவிடப்பட்ட சிறுமியின் தாயார் மயக்க நிலையில் இருந்தார். சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு நினைவு திரும்பியது. அப்போது அவர்  கூறுகையில், ‘‘மகன், மகளுடன் குருத்வாராவுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தேன்.

டிரைவரின் நண்பர்கள் சிலர் என்னுடைய மகளிடம் தவறாக நடக்க முயன்றனர். பஸ் பயணிகள், டிரைவர், நடத்துனர் ஆகியோரிடம் முறையிட்டேன். யாரும்  தடுக்க முன்வரவில்லை. நான் தடுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் என்னையும், மகளையும் பஸ்சில் இருந்து தள்ளி விட்டனர்’’ என்றார்.டெல்லியில் கடந்த 2  வருடங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பஸ்சில் இருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேபோன்ற சம்பவம் தற்போது பஞ்சாபில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • தீவிரவாதிகளுக்கு தனி சிறை மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்



  • தாய், மகள் பலாத்கார விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்



  • மகளிர் காவல் நிலையங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : அரியானா பாஜ அரசு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு



  • ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு



  • போலி சான்றிதழ் கொடுத்த ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் தோமரை நீக்க வேண்டும் : டெல்லியில் பாஜ போராட்டம்



  • நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]