இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது

4/30/2015 2:33:45 PM
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு

நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பகுதியை சேர்ந்தவர் பிரேட்டி கிரே(25). கருப்பின வாலிபரான இவரை வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீஸ் காவலில் இருந்த கிரே உயிரிழந்தார். கடந்த திங்கள் கிழமை மதியம் கிரேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.போலீசார் தாக்கியதால்தான் கிரே இறந்ததாக கூறி பால்டிமோரில் வன்முறை வெடித்தது.  வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வணிக வளாகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடினர். கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இதையடுத்து அங்கு அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

கலவரக்காரர்களை ஒடுக்கும் வகையில், போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் என சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று வன்முறை கட்டுக்குள் வந்தது. பால்டிமோர் பகுதியில் அமைதி திரும்பியதை அடுத்து பள்ளிகள், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் முழுமையான அமைதி அங்கு திரும்பவில்லை. எனவே, போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான காலகட்டத்தில் வன்முறைகள் நிகழ வாய்ப்புள்ளதால் அந்த சமயத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு



  • பாகிஸ்தானில் அரசு பள்ளி மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்கு: மாணவர்கள் தப்பினர் காவலாளி பலி



  • நியு கினியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி



  • சவுதி அரேபியாவில் இந்தியரை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்



  • நாகா தீவிரவாதிகள் அட்டூழியம் : துணை ராணுவத்தினர் 8 பேர் சுட்டு கொலை: அசாமில் பரபரப்பு



  • நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்



  • இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?



  • உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்



  • பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு



Facebook

Twitter

சித்தரின் வாழ்க்கை படத்தில் அர்ச்சனா சிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]