இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?

4/30/2015 2:33:24 PM
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு

லண்டன்: இங்கிலாந்தில் வருகிற 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பிரசாரம் களைகட்டியுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த பிரதமர் டேவிட் கேமரூன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இங்கிலாந்தில் மே மாதம் 7ம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 650 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சி உள்ளிட்டவை தேர்தல் களத்தில் உள்ளன. இதில், கன்சர்வேடிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.ஆளும் கட்சி சார்பில், பிரதமர் பதவிக்கு தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் போட்டியிடுகிறார். தொழிலாளர் கட்சி சார்பில் எட் மிலிபேண்ட், சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் நிக் கிளேக் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவிவரும் நிலையில் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

2வது முறையாக களமிறங்கும் பிரதமர் டேவிட் கேமரூன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். இங்கிலாந்தில் இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களை கவரும் வகையில் கேமரூன் பிரசாரம் செய்து வருகிறார். இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.இந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை சம பலத்துடன் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இரு கட்சிகளுக்கும் தலா 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர ஜனநாயக கட்சிக்கு 7 சதவீத வாக்குகளும், இங்கிலாந்து சுதந்திரா கட்சிக்கு 11 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு



  • பாகிஸ்தானில் அரசு பள்ளி மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்கு: மாணவர்கள் தப்பினர் காவலாளி பலி



  • நியு கினியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி



  • சவுதி அரேபியாவில் இந்தியரை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்



  • நாகா தீவிரவாதிகள் அட்டூழியம் : துணை ராணுவத்தினர் 8 பேர் சுட்டு கொலை: அசாமில் பரபரப்பு



  • நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்



  • கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது



  • உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்



  • பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு



Facebook

Twitter

சித்தரின் வாழ்க்கை படத்தில் அர்ச்சனா சிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]