மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்
4/30/2015 2:10:20 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு முறைப்படி ஒப்புதல்் அளிக்கப்பட்டது. வரும் 2022க்குள் 100 நகரங்களும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டியாக மாறப்போகும் 100 நகரங்கள் பட்டியல் வருமாறு:தமிழ்நாடடில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, மகாராஷ்டிராவில் மும்பை, பூனா, நாக்பூர், நாசிக், அவுரங்காபாத், பிவாண்டி, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, துர்காபூர், ஹால்டியா, ஹப்ரா, ஜாங்கிபுர், குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா,ராஜ்காட், பவ்நகர், ஜுனாகத், காந்திநகர், மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், குவாலியர்,புர்கான்புர், ஜபல்பூர், கர்நாடகாவில், பெங்களூர், குல்பர்கா, பிடார், பிஜபூர், பதாமி, பட்டாடகல், மகாகுட்டா, கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், திருவலா, எர்ணாகுளம், கொச்சின், திருச்சூர், தெலங்கானாவில் ஐதராபாத், வாராங்கல், கரீம் நகர், நிஜாமாபாத், நல்கொண்டா, ஆந்திராவில் குண்டூர், விஜயவாடா, கர்னூல், சித்தூர், உ.பியில் கான்பூர், அலகாபாத், லக்னோ,ஜான்சி, பைசாபாத், வாரணாசி, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்,ஆஜ்மர், பரத்பூர், பிகானிர், ஜோத்பூர்,கோட்டா, உதைப்பூர், பஞ்சாபில் லூதியானா,அமிர்தசரஸ், ஜலந்தர், பாட்டியாலா, பீகாரில் பாட்னா, முசாபர்நகர், கயா, பகல்பூர், பீகார் சரீப், அரியானாவில் பரிதாபாத், குர்கான், பானிபட், அம்பாலா, அசாமில் கவுகாத்தி, தின்சுக்யா, ஒடல்குரி, தங்கலா,கோல்பாரா, ஒடிசாவில் புவனேஷ்வர், கட்டாக், ரூர்கேலா, சம்பல்பூர், பாலாசூர், இமாச்சல பிரதேசத்தில் சிம்லா, உத்தரகாண்டில் டேராடூன், ஹரித்துவார், ரூர்கி,ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர், தன்பாத், ராஞ்சி, சிக்கமில் காங்டாக், பெல்லிங், யுக்சம் மற்றும் மணிப்பூரில் விஷ்ணுபூர், சான்டல் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட உள்ளன.