இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தற்கொலை செய்யும் விவசாயிகள் கிரிமினல்கள் : பாஜ அமைச்சர் சா்ச்சை பேச்சு

4/29/2015 3:54:52 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

சண்டிகர்:  தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்கள் என அரியானா மாநில வேளாண் துறை அமைச்சர் ஒ.பி.தாங்கர் பேசியிருப்பது  புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் கடந்த மாதம் பருவம் தவறி கனமழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவிலான  பயிர்கள் அறுவடை சமயத்தில் நாசமாயின. கடன்வாங்கி பயிரிட்ட பல விவசாயிகள் தற்கொலை மூலம் பிரச்னைகளுக்கு முடிவு தேடி வருகிறார்கள்.  டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில் பொது மக்கள் மத்தியில் ராஜஸ்தான் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மத்திய  அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் ஏற்கனவே நொந்து போய் இருக்கும் விவசாயிகளின் குரல் வளையை நெறிப்பதாக இருப்பதாக காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.

இருப்பினும் நில சட்டத்தை பின்வாங்க மாட்டோம் என மத்திய அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளை மேலும்  அவமதிக்கும் வகையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள் எனவும் சட்டப்படி கிரிமினல்கள் எனவும் அரியானா பாஜவை சேர்ந்த மாநில  வேளாண் அமைச்சர் ஒ.பி.தாங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம். தற்கொலை செய்து கொள்பவர்கள்  தங்களது குடும்ப பொறுப்பிலிருந்து தப்பி ஓட பார்க்கிறார்கள். அவர்கள் கோழைகள். அத்தகையவர்களுக்கு அரசு ஒரு போதும் துணை போகாது. இவ்வாறு  அமைச்சர் கூறினார்.விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்துவரும் வேளையில் மாநில அமைச்சர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரின் பேச்சு எல்லை மீறியுள்ளது. பாஜவின் உண்மையான முகம் வெளிப்பட தொடங்கிவிட்டது என  காங்கிரஸ் எம்பி சிந்தியா தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



  • தெகல்கா மீது உரிமை மீறல் பிரச்னை: ராஜ்யசபாவில் 60 எம்பிக்கள் நோட்டீஸ்



  • முடிவுக்கு வருகிறது பட்ஜெட் தொடர் முக்கிய மசோதாக்கள் நிலை கேள்விக்குறி



  • பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் : 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: தானியங்களை கொள்முதல் செய்யவும் முடிவு



  • டெல்லியில் பொது இடத்தில் குப்பைகளை எரித்தால் ரூ. 5000 அபராதம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி



  • மேகதாது அணை விவகாரம் : பிரதமரை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]