இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஆப்கனில் நிலச்சரிவு 52 பேர் பரிதாப பலி

4/29/2015 2:45:28 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

காபூல்: வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பதக்‌ஷான் மிகவும் பின்தங்கிய பிராந்தியமாகும். தஜிகிஸ்தான் நாட்டை ஒட்டி அமைந்துள்ள இந்த மலை பிராந்தியத்தில் ஏப்ரல், மே மாதங்களில் பனிக்கட்டிகள் உருகி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள கவாஹன் பகுதியில் நேற்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு கிராமம் அடியோடு மண்ணில் புதைந்தது. 100க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்தனர். நேற்று மாலை வரை 52 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். ஒரு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலச்சரிவு காரணமாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே இந்த பகுதிக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு படையினர் நிலச்சரிவின் மறுபக்கத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணில் இன்னும் நிறைய பேர் புதைந்திருக்கலாம் என்பதால் உயிர்பலி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சில
  • நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்



  • கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது



  • இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?



  • உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்



  • பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு



  • சவுதியில் கட்டிடம் இடிந்ததில் இந்தியர் உள்பட 10 பேர் பலி



  • ஏமன் உள்நாட்டு போர் காரணமாக 3 லட்சம் பேர் வீடு இழந்து தவிப்பு: ஐ.நா. தகவல்



  • நேபாள பூகம்பத்தின் பயங்கரம் : 80 லட்சம் பேர் பாதிப்பு : 80 மணி நேரத்திற்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு



  • கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் வன்முறை அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]