‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்
4/29/2015 2:40:08 PM
படுகவர்ச்சியாக ஆடிவிட்டேன். ஜாலியாக என்ஜாய் பண்ணுங்கள் என்றார் சார்மி. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படங்கள் இல்லாததால் முடங்கி கிடந்தார் சார்மி. அவருக்கு கடைசி வாய்ப்பாக புரி ஜெகனாத் தான் இயக்கும் ஜோதிலட்சுமி படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுத்தார். இதற்கிடையில் 8 வருடத்துக்கு பிறகு உருவாகும் மந்த்ரா 2ம் பாகத்திலும் நடிக்கிறார். இதை எஸ்.வி.சுரேஷ் இயக்குகிறார். முதல்பாகத்தில் சார்மி கவர்ச்சியாக ஆடிய, ‘மஹா மஹா....’ என்ற பாடல் பரபரப்பாக பேசப்பட்டது. 2ம் பாகத்திற்காக சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக ஆடியிருப்பதாக சார்மி கூறினார்.
இதுபற்றி அவர் கூறியது: மஹா மஹா பாடலுக்கு ஆடியதை ரசிகர்களால் மறக்க முடியாமல் அதுபற்றி குறிப்பிட்டு பேசுகிறார்கள். மந்த்ரா 2ம் பாகத்துக்காக ஏற்கனவே ஆடியதைவிட 10 மடங்கு அதிகமாக கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறேன். முதலில் 2ம் பாகத்தில் பாடல் வைக்காமல் ஹாலிவுட் பாணியில் படத்தை உருவாக்க எண்ணி இருந்தார் இயக்குனர். ஆனால் பலரும் கேட்டுக்கொண்டதால் டைட்டில் பாடல் வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பாடலை பார்த்தபிறகு ஏற்கனவே நான் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தை மறந்துவிடுவார்கள். படுகவர்ச்சியாக, உணர்ச்சியை தூண்டுவதாக, ஜாலியாக, கும்மாளமாக இப்பாடலுக்கு ஆடி இருக்கிறேன்’ என்றார்.