இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லியில் பொது இடத்தில் குப்பைகளை எரித்தால் ரூ. 5000 அபராதம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி

4/29/2015 2:21:27 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை எரிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. மீறுபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக பெருகி வரும் வாகனங்கள் காரணமாக கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் பசுமை தீர்ப்பாயம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் ஓட்ட தடைவிதித்து பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கையாக டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள், வீணாகும் பொருட்கள் போன்றவற்றை தெருக்களில், பொது இடங்களில் எரிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அவ்வாறு எரிப்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உடனடியாக இந்த உத்தரவை டெல்லி மற்றும் சுற்றியுள்ள அரியானா, சண்டிகர் உள்ளிட்ட அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.இதுகுறித்து பசுமை தீர்ப்பாய தலைவர் சுதந்திர குமார் அளித்துள்ள தீர்ப்பில், பொது இடத்தில் குப்பைகளை எரிப்பதால் டெல்லியில் மாசின் அளவு 2.9 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கிறது. இதனால் மக்களுக்கு சுவாச கோளாறுகள், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



  • தெகல்கா மீது உரிமை மீறல் பிரச்னை: ராஜ்யசபாவில் 60 எம்பிக்கள் நோட்டீஸ்



  • முடிவுக்கு வருகிறது பட்ஜெட் தொடர் முக்கிய மசோதாக்கள் நிலை கேள்விக்குறி



  • தற்கொலை செய்யும் விவசாயிகள் கிரிமினல்கள் : பாஜ அமைச்சர் சா்ச்சை பேச்சு



  • பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் : 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: தானியங்களை கொள்முதல் செய்யவும் முடிவு



  • மேகதாது அணை விவகாரம் : பிரதமரை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]