இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஜிம்பாப்வே அணி பாக். சுற்றுப்பயணம்

4/28/2015 2:26:57 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக எந்த அணியும் அந்த நாட்டுக்குச் சென்று விளையாட முன்வருவதில்லை. கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்த அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இதனால், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாது என வெளிநாட்டு அணிகள் அனைத்தும் தெரிவித்துவிட்டன.இதனால், பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து, நடுநிலை நாடுகளில் பாகிஸ்தானுடன் வெளிநாட்டு அணிகள் விளையாடி வருகின்றன. பெரும்பாலும் இத்தகைய போட்டிகள் வளைகுடா நாடுகளில் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றிருந்தும், அரசியல் காரணங்களால் அதிக அளவில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வரும் ஜிம்பாப்வே அணியை தங்களது நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருமாறு பாகி்ஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்தது.

உடனடியாக இந்த அழைப்பை ஜிம்பாப்வே வாரியம் ஏற்றுள்ளது. தங்களது நாட்டு அணிக்கு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஜிம்பாப்வேவில் இருந்து பாதுகாப்பு குழு மே 2 ம் தேதி பாகி்ஸ்தான் வர உள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி மே 15 அல்லது 16ம் தேதி பாகிஸ்தான் வரும் என்று தெரிகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணி மோதும். அனைத்து போட்டிகளையும் லாகூரில் நடத்த பாக். வாரியம் திட்டமிட்டுள்ளது. சுற்றுப்பயணம் மேற்கொள்ள வர ஒப்புக் கொண்ட ஜிம்பாப்வே அணிக்கு, பாகிஸ்தான் 5 கோடி ரூபாய் தர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • இந்தியாவுடன் விளையாட வெ.இ. விருப்பம்



  • பிரேகு ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா முன்னேற்றம்



  • கவுண்டி கிரிக்கெட்டில் புஜாராவுக்கு தவறான அவுட் கொடுத்த அம்பயர்களை கேலி செய்த ரசிகர்கள்



  • சேப்பாக்கத்தில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி



  • 2024ம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் கிடையாது



  • 114 வாரங்களாக உலகின் நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் சாதனை



  • போல்ட் வேகத்தில் போல்டு ஆனது பஞ்சாப் சன் ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 3வது வெற்றி



  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் நிஷிகோரி மீண்டும் சாம்பியன்



  • ஷாம்கிர் செஸ் தொடர்; கார்ல்சன் சாம்பியன்



  • அசத்தும் ஸ்டார்க், ரஹானே சொதப்பும் யுவராஜ், கார்த்திக்



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]