தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு
4/28/2015 2:17:53 PM
உத்திரமேரூர் : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காஞ்சி மாவட்ட 2வது மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் உத்திரமேரூரில் நேற்று நடைபெற்றது, இதில் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் எழிலரசு, ஒன்றிய செயலாளர் ராபட், புரட்சி பாரதம் ஒன்றிய செயலாளர் அப்பு, இந்திய குடியரசு கட்சி சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் நிக்கோலஸ் தொடக்க உரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாரதி அண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் விடுதலைசெழியன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர், தயாளன், ஜெயந்தி உள்பட பலர் பேசினர்.
நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்குதல், கவுரவ கொலைகளுக்கு உடனடியாக சட்டத்திருத்தம் செய்தல், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்ப பெற வேண்டும், தலித் மாணவர்களுக்கு அரசாணை 92ன் படி கல்லூரி கட்டணங்களை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ப உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கருத்துரை வழங்கினர்.