விஜயா வங்கியில் புரொபஷனரி மேனேஜர் பணி, சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்ஸ் காலிபணியிடங்கள்
4/27/2015 3:36:08 PM
பெங்களூரை
தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விஜயா வங்கி இந்தியா முழுவதும் 1600
கிளைகளையும், அலுவலகங்களையும் கொண்டுள்ளது. இந்த வங்கியில் 13
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இதில் 27 புரொபஷனரி மேனேஜர்
மற்றும் சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்ஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
புரொபஷனரி மேனேஜர் மற்றும் சார்டர்ட் அக்கவுன்டென்ட்ஸ்:
27 இடங்கள். (பொது - 14, ஒபிசி - 7, எஸ்சி - 4, எஸ்டி - 2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.19,400 - 28,100.
வயது:
1.3.2025
அன்று 20 முதல் 35க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும்,
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
சிஏ படிப்பில் தேர்ச்சி.
விண்ணப்ப கட்ட ணம்:
பொது
மற்றும் ஒபிசியினருக்கு ரூ.300 (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.50) நேர்முகத்
தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வங்கி
நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் குழு விவாதம், ஆன்லைன் தேர்வும்
நடத்தப்படும்.
www.vijayabank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Vijaya Bank, P.O.
Box No.5136, G.P.O.
Bangalore- 560001.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.4.2015.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 9.5.2015.