ராணுவ தலைமை சிவில் அலுவலகத்தில் பல்வேறு பணிகள்
4/27/2015 3:06:20 PM
அந்தமான்
நிக்கோபார் ராணுவ தலைமை சிவில் அலுவ லகத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர்,
டிராப்ட்ஸ் மேன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பல்நோக்கு பணியாளர் ஆகிய 46
பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
1. ஸ்டெனோகிராபர் (கிரேடு - 2).
11 இடங்கள். (பொது - 8, எஸ்சி - 1, ஒபிசி - 2).
தகுதி:
பிளஸ்
2வுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10
நிமிடங்களில் 800 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதை
ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும் அல்லது இந்தியில் 65 நிமிடங்களிலும்
கம்ப்யூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
2. டிராப்ட்ஸ் மென்:
2 இடங்கள். (பொது).
தகுதி:
பிளஸ் 2வுடன் டிராப்ட்ஸ் மேன் பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது ஐடிஐ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு முன் அனுபவம்.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
3. டேட்டா என்ட்ரி ஆப ரேட்டர்:
2 இடங்கள் (பொது).
தகுதி:
பிளஸ்
2வுடன் கணிதம்/ புள்ளியியல்/ கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களில்
ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டரில் ஒரு மணி நேரத்தில்
1000 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
4. பல்நோக்கு பணியாளர் (அலுவலகம் மற்றும் பயிற்சி):
31 இடங்கள். (பொது - 17, எஸ்சி - 4, எஸ்டி - 2, ஒபிசி - 8).
தகுதி:
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி.
வயது:
மேற்கண்ட
அனைத்து பணிகளுக்கும் பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 27க்குள். எஸ்சி,
எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்
திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு
அளிக்கப்படும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://ids.nic.in/ancommand.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Commander in Chief, (For SSO (Civ) Hqrs,
Andaman & Nicobar Command,
PortBlair.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.5.2015.