பெருநகர் கிராமத்தில் கிராம வருவாய் திட்ட முகாம் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு
4/25/2015 12:53:08 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூரை அடுத்த பெருநகர் கிராமத்தில் நேற்று கிராம வருவாய் திட்ட முகாம் நடைபெற்றது.இம்முகாமுக்கு ஒன்றிய குழு உறுப்பினர் கருணாகரன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் பேபி இந்திரா, சேர்மன் கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றம், மகளிர் திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 93 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது.கிராம மக்கள் அளித்த 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது, மீதமுள்ள 64 மனுக்கள் மேற்பரிசீலைனைக்காக நிலுவையில் உள்ளது.இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ-வான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு, அதிகாரிகளால் தீர்வு காணப்பட்ட மனுக்களை பயனாளிகளிடம் வழங்கி சிறப்புரையாற்றினார்.இம்முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார், ஆர்.ஐ. இந்துமதி, கிராம உதவியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியின் முடிவில் கிராம நிர்வாக அலுவலர் திருமால் அனைவருக்கும் நன்றி கூறினார்.