இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

11/2/2025 5:22:28 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 5ம் தேதி வரை கனமழை தொடரும்: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உத்தரவு

லண்டன்: வரும் 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை இந்தியா எட்டும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா-வின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் சிஓபி-26 நாடுகளின் மாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி நிகழ்த்திய உரையில், ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக போராடி வருகிறது. இதன் பலன்கள் விரைவில் தெரியும். காலநிலை மாற்றத்தை இந்தியா தனது அனைத்து கொள்கைகளிலும் மைய கருத்தாக கொண்டிருக்கிறது. பாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி செயல்பட்ட ஒரே பெரிய நாடு இந்தியாதான் என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதிகளை முன்வைக்கிறேன். வரும் 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா-வாட் அளவுக்கு புதைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின்சார உற்பத்தி திறன் பெருக்கப்படும்.

வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின்சாரத் தேவையில் 50 சதவிகிதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறும். இந்தாண்டு முதல் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா தனது கரியமிலவாயு மாசை ஒரு பில்லியன் டன் அளவுக்கு குறைக்கும். பொருளாதாரத்தில் கார்பனின் பங்களிப்பை 45 சதவீதம் என்ற அளவில் இந்தியா குறைக்கும். வரும் 2070ம் ஆண்டுக்குள் பூஜ்யம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை இந்தியா அடையும். சுற்றுச்சூழல் மாசை குறைப்பதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். ஆனால் இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்திற்கான பங்களிப்பு, ஐந்து சதவீதம் மட்டுமே’ என்று தெரிவித்தார். தொடர்ந்து காலநிலை மாற்றம் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சில விபரங்களை பட்டியலிட்டார்.

''போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை''
கிளாஸ்கோ மாநாட்டின் போது, பிரிட்டீஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினார்கள். இந்த ஆண்டு போரிஸ் ஜான்சன் இந்தியா வரும் திட்டத்தை இரண்டு முறை ஒத்தி வைத்தபிறகு இரண்டு தலைவர்களுக்கிடையில் நடைபெறும் முதல் சந்திப்பாக இது இருந்தது. சந்திப்பின்போது இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார். கிளாஸ்கோ மாநாடு முடிவுற்றதால் பிரதமர் மோடி இன்று நாடு திரும்புகிறார்.

மேலும் சில
  • அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி



  • போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலை



  • டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு



  • மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி



  • ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்



  • உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]