இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலை

10/30/2021 5:09:46 PM
கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

மும்பை: போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பாலிவுட் நடிகரின் மகன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதனால், ஆர்த்தர் சிறைச்சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில்  ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர்  கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு  நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்காததால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

மும்பை உயர்  நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல்  ரோஹத்கி ஆஜாரானார். கடந்த 3 நாட்களாக அவர் ஆஜராகி தனது வாதத்தை வைத்தார்.  அப்போது அவர், ‘ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை  உறுதிப்படுத்தவில்லை. ஆர்யன் கான் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்து போது.  அது மிகப் பழைய உரையாடல், அதற்கும் அக். 2ம் தேதி கார்டீலியா கப்பலில்  நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை. ஆர்யன் கான் அந்தக் கப்பலில் செல்ல டிக்கெட்  வாங்கவில்லை. அவரை விருந்தினராக அழைத்துள்ளனர். ரிமாண்ட் விண்ணப்பத்தில் சரியான உண்மைகள் குறிப்பிடப்படவில்லை.

எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்’  என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி,  மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு நேற்று  முன்தினம் ஜாமீன் வழங்கியது. அவர், நேற்று ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக நேற்று ‘பெயில் பாக்ஸ்’ சிறைக்கு வெளியில் வைக்கப்பட்டது. அதில் நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவின் அசல் பத்திரம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணி முதலே மும்பை ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை அதிகாரிகள், ஆர்யன் கானை ஜாமீனில் விடுவிக்கும் முன்னேற்பாடுகளை செய்தனர்.

சிறை நடைமுறைகள் முடிந்த பின்னர், இன்று காலை 11 மணியளவில் சிறையில் இருந்து ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக சிறை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால், ஆர்த்தர் ரோடு பரபரப்பாக காணப்பட்டது. வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் காரில் தனது மகன் ஆர்யன் கானை ஷாருக்கான் அழைத்து சென்றார். அதேபோல், ஆர்யன் கானுடன் கைதான அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். மூவரும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று என்சிபி அலுவலகத்தில் ஆஜராகி தாங்கள் தலைமறைவாகவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி



  • டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு



  • மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி



  • ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்



  • உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



  • கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஆயுதம் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]