இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி

10/30/2021 4:58:31 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பெங்களூரு: கன்னட திரையுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களால் பவர் ஸ்டார் என பெருமையுடன் அழைக்கப்பட்ட இளம்கலைஞர் புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பால் நேற்று காலமானார். அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர், நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்ப டாக்டர் ரமணாவிடம் ெ்சன்றார்.

அவருக்கு இசிஜி உள்ளிட்ட பரிசோதனை செய்தபோது லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. டாக்டர் ஆலோசனை பேரில் காலை 11.30 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவரது இதயம் செயல்படாமல் இருப்பது தெரிந்தது. உடனடியாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் மாரடைப்பு தீவிரமாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

புனித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் சகோதரர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் மனைவி அஷ்வினி ரேவந்தி உள்பட குடும்பத்தினர் வந்தனர். அவர்களுடன் டாக்டர்கள் ஆலோசனை நடத்தினர். புனித் ராஜ்குமாரின் நிலையை முழுமையாக விளக்கி காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்தபின், புனித் உயிரிழந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள புனித்  ராஜ்குமார் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட திரையுலகின் முன்னணி கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின் குடும்ப சம்பிரதாயப்படி பூஜைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலையில் ஆம்புலன்ஸ் மூலம் கண்டீரவா உள் விளையாட்டு அரங்கிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர்மல்க அஞ்சலி ெசலுத்தி வருகிறார்கள்.

மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து பஸ், ரயில், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஆயிரகணக்கான ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்றிரவு முழுவதும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போலீசார் சமாளிக்க பெரும் அவதிப்பட்டனர். புனித் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே தேசிய விருது பெற்றுள்ளார். மாநில அரசின் சார்பிலும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளதால், அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதை ெதாடர்ந்து நேற்றிரவு 10.45 மணிக்கு புனித் ராஜ்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் வந்த முதல்வர் பசவராஜ் பொம்ைம, மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் ஆகியோர் அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமாரியின் மூத்த மகன் த்ருத்தி, ஜெர்மனியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். விமானத்தில் இன்று பெங்களூரு வந்தார்.

அதை தொடர்ந்து இன்று மாலை புனித் ராஜ்குமார் உடல், பெங்களூரு கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள அவரது பெற்றோர் சமாதி அருகில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புனித் ராஜ்குமார் உடலுக்கு கன்னட திரையுலகினர் மட்டுமில்லமால் தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதிர்ச்சியில் 3 பேர் பலி
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பால் காலமான செய்தியை அறிந்ததும் கன்னட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அவரது தீவிர ரசிகர்களான முனியப்பன், பரசுராம் ஆகியோர் மாரடைப்பால் மரணமடைந்தனர். மேலும் பெல்காரம் பகுதியை சேர்ந்த ராகுல் (21) என்பவர், புனித் இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் தவித்தார். இதனால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற அவர், இன்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் சில
  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை



  • அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி



  • போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலை



  • டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு



  • ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்



  • உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]