இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

10/27/2021 5:03:07 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் ‘என்எஸ்ஓ’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் (செயலி) மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரபலங்கள், அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், தனி நபர்களின் செல்போன் எண்கள் உளவு பார்க்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவிலும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இவ்விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.

இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஒத்திவைத்தது. முன்னதாக நடந்த விசாரணையின்போது, பெகாசஸ் விவகாரம் பற்றி விசாரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள்  குழு அமைக்கப்படும் என்றும், இது தேச பாதுகாப்பு தொடர்புள்ள விஷயம்  என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த கூடாது எனவும் ஒன்றிய அரசின் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் அமர்வு, பெகாசஸ் செயலி மூலம் சட்ட விரோதமான முறையில் ஒன்றிய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா? அல்லது இல்லையா? என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த 13ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு, ‘அடிப்படை உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்க முடியாது.

இவ்விசயத்தில் அனைவரையும் பாதுகாப்பதற்காக எதையும் நீதிமன்றம் மறைக்காது. தனிமனித உரிமை மீறலில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே இதனையும் பார்க்க வேண்டும். சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஆனால், இந்த கட்டுப்பாடுகள் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தொடரப்பட்ட ரிட் மனுக்களால் நீதிமன்றம் திருப்தி அடையவில்லை. அதேநேரம் பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தொடரப்படும் பொதுநல வழக்குகளை நீதிமன்றம் ஊக்கப்படுத்துகிறது. பெகாசஸ் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட ஒன்றிய அரசுக்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் வரையறுக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தால், எங்களது சுமை குறைந்திருக்கும். ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை தௌிவுபடுத்த வேண்டும். நீதிமன்றத்தை வெறும் பார்வையாளராக வைத்திருக்க கூடாது. தனியுரிமை பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதனால், ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றிய அரசு, இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒன்றிய அரசுக்கு ஓர் உத்தரவை பிறப்பிக்கிறோம். அதாவது, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமித்து உத்திரவிடுகிறோம்.

இந்தக் குழுவில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமை வகிப்பார். அவருக்கு உதவியாக நிபுணரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அலோக் ஜோஷி உள்ளிட்டோர் செயல்படுவர். மேலும், குஜராத்தை சேர்ந்த தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டீன் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவின் அமிர்தா விஷ்வ வித்யா பீடத்தின் பேராசிரியர் பிரபாகரன், மகாராஷ்டிரா மாநிலம் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் அஷ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு அடுத்த 8 வாரத்தில் பெகாசஸ் தொடர்பாக விசாரித்து. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று தீர்ப்பு வழங்கினர்.

மேலும் சில
  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை



  • அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி



  • போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலை



  • டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு



  • மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி



  • ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்



  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]