இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

9/27/2021 5:03:45 PM
கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சேலம்: 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய, சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆறுதல் கூறினார். சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மனைவி ராஜநந்தினி (40). இவர்களது மகள் ஜனனி (14). இவர் அழகாபுரம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பாட்டம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற போட்டிகளில் ஜனனி மாநில அளவில் பரிசு பெற்றுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சிறுமி, வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் சிறுமிக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து போனது தெரியவந்தது.

இதையடுத்து ராஜநந்தினி சிறுமிக்கு தனது ஒரு கிட்னியை கொடுத்தார். ஆனால் அந்த கிட்னியும் 15 நாட்களுக்கு பிறகு செயலிழந்து போனது. இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்த தாய், இதுகுறித்து தலைமை செயலகத்தில் உதவி செய்யுமாறு மனு கொடுத்தார். சிறுமிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சிறுமி ஜனனி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “வணக்கம் சிஎம் சார். நாங்கள் சேலத்தில் வசித்து வருகிறோம். எனக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு இரண்டு கிட்னியும் செய லிழந்து போனது. எனது அம்மா எனக்கு கிட்னி கொடுத்தார்கள்.

ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மிகவும் பயமாக இருக்கிறது. படிக்க கூட முடியவில்லை. 2 ஆண்டாக டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறேன். வலி தாங்க முடியவில்லை. பிளீஸ் சிஎம் (இரண்டு கரங்களையும் கும்பிட்டபடி) என்னை எப்படியாவது காப்பாத்த முடியுமா? ஹெல்ப் பன்னுங்க பிளீஸ்\” என அந்த சிறுமி உருக்கமாக பேசி இருந்தார். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இந்நிலையில், சிறுமியின் தாயிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்போனில் பேசி சிறுமியின் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அந்த ஆடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஹலோ.. நான் ஸ்டாலின் பேசுறேன்.

குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது பற்றி சுகாதாரத்துறையிடம் பேசியுள்ளேன். தைரியமாக இருங்கள். காத்திருப்பில் உள்ளதால் வந்தவுடன் முதல் உரிமை சிறுமிக்கு கொடுக்க சொல்லி உள்ளேன். இதனால் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.அதற்கு சிறுமியின் தாய் ராஜநந்தினி பதில் பேசும்போது, எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம். எனது குழந்தையை காப்பாற்றினால் போதும். ஏற்கனவே நான்பட்ட கஷ்டம் போதும். நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் எனது மகள் உங்களிடம் பேசுவதற்கு ஆவலாக இருக்கிறாள் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து சிறுமியிடம் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எல்லாம் சரியாகி விடும். பயப்பட வேண்டாம். தைரியமாக இருக்க வேண்டும். கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். விரைவில் கிடைத்து விடும். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார்.

மேலும் சில
  • சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • கடந்த 5 ஆண்டு காலத்தில் 27 கோடி சொத்து குவிப்பு: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு



  • பரவலாக பெய்து வரும் கனமழை தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!



  • 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலையில் அதிரடி சரிவு: இன்று காலையில் பவுன் 400 குறைந்தது



  • நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெ. நினைவிடத்தில் சசிகலா மீண்டும் சபதம்?: அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவாரா



  • கொளத்தூர் தொகுதியில் 560 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு



  • நிதி நிறுவனத்திடம் வாங்கிய 1.21 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல்: கெஞ்சி கேட்கும் வீடியோ வைரலானது



  • ஊரக உள்ளாட்சி களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் உதித்திட வேண்டும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]