இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை

9/25/2021 4:53:59 PM
லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி டிசம்பர் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றஎடப்பாடி-ஓபிஎஸ் பலப்பரீட்சை: அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல், நேற்று மதியம் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியவர்கள் மீது போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜிதேந்தர் கோகியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றபோது, எதிர்தரப்பு ரவுடிகள் கொலை செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளனர். டெல்லியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டெல்லி கீழமை நீதிமன்றங்களில் உரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் டெல்லி காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி செய்ய வேண்டும். தற்போது நடந்துள்ள சம்பவம், மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற புறக்கணிப்பை நடத்தினர். இதற்கிடையே, மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும். முக்கிய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை விட, அவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்துவதை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை ஓரிரு நாளில் நடைபெறும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சில
  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



  • கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஆயுதம் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை



  • அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளித்த நிலையில் டெங்கு வைரசுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டாங்க!: சென்னை உட்பட 20 மருத்துவக் கல்லூரிகளில் பரிசோதனை



  • தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்: கேரளாவுக்கு 2 நாள் மழை எச்சரிக்கை



  • கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம்



  • கேரள நிலச்சரிவில் 29 பேர் பலி: மேலும் 4 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழு தீவிரம்



  • கேரளாவை புரட்டிப் போட்ட கன மழை, பெருவெள்ளம்: நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் கதி என்ன? தேடுதல் பணியில் ராணுவம், கடற்படை தீவிரம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]