தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு
9/24/2021 5:03:15 PM
சென்னை: தங்கம் விலை கடந்த 22ம் தேதி அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,413க்கும், பவுனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு பவுன் ரூ.35,304க்கும் விற்கப்பட்டது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.4,388க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.35,104க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலையும் தங்கம் விலை குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.31 குறைந்து ஒரு கிராம் ரூ.4,357க்கும், பவுனுக்கு ரூ.248 குறைந்து ஒரு பவுன் ரூ.34,856க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் பவுன் ரூ.448 குறைந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.