இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்

8/28/2021 6:03:22 PM
கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவீனா பட்டேல் வீல் சேரில் அமர்ந்த நிலையில், ரவுண்ட் 16 சுற்றில் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் நேற்று விளையாடினார். 3-0 என வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து கால் இறுதியில், செர்பியாவின் பெரிக் ரன்கோவிக்குடன் மோதினார். இதில் ஆதிக்கம் செலுத்திய பவினா 3-0 என (11-5, 11-6, 11-7 ) எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

தொடர்ந்து இன்று காலை நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குடன் பவினா மோதினார். இதில் முதல் செட்டை 7-11 என இழந்த பவினா 2வது செட்டை 11-7, 3வது செட்டை 11-4 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 4வது செட்டை 11-9 என சீன வீராங்கனை கைப்பற்றினார. 4 செட் முடிவில் 2-2 என சமனில் இருக்க வெற்றியை தீர்மானிக்கும் பரபரப்பான 5வது செட்டை 11-8 என பவினா கைப்பற்றினார். முடிவில் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பவினா இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார். இந்திய நேரப்படி நாளை காலை 7.15 மணிக்கு நடக்கும் இறுதி போட்டியில் சீனாவின் ஹூயங்குடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்றால் பவினா தங்கப்பதக்கம் வெல்வார்.

தோல்வி அடையும் பட்சத்தில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும். அரையிறுதியில் வென்ற பின் பவினா கூறுகையில், ``சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என்று நிரூபித்து உள்ளேன். நான் இறுதி போட்டிக்கு செல்வேன் என்று நினைத்தது இல்லை.  100 சதவீதம் விளையாடினேன். இறுதி போட்டிக்கு மனதளவில் தயாராக உள்ளேன். இதுபோன்று தொடர்ந்து விளையாடினால், நிச்சயம் தங்க பதக்கம் வெல்வேன்’’ என்றார்.

மேலும் சில
  • கேகேஆரை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி



  • பைனலில் கேகேஆருடன் இன்று பலப்பரீட்சை: கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: மகுடம் சூடும் அணிக்கு 10 கோடி பரிசு



  • இன்று குவாலிபயர் 2 போட்டி: கொல்கத்தா பவுலிங்கை சமாளிக்குமா டெல்லி?



  • இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட் ஓவலில் நாளை தொடக்கம்: அஸ்வினுக்கு இடம்



  • டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இன்று ஒரே நாளில் 4 பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்: வட்டு, ஈட்டி எறிதலில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம்



  • நீதிமன்ற உத்தரவால் தடகள போட்டியில் பங்கேற்க போலந்து செல்கிறார் குமரி மாணவி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் மகிழ்ச்சி



  • ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறி லவ்லினா அசத்தல்..! இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி



  • அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து



  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி



  • ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]