இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி

8/26/2021 5:38:25 PM
பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல் செப்டம்பர் மாதத்தில் 100 சதவீதம் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பாஸ்டன்: பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலாவுக்கு, முக முடக்கு வாத அறுவை சிகிச்சைக்காக பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் என்ற மாணவி கடந்த 9  ஆண்டுகளுக்கு முன் பள்ளிப் படிப்பை படித்துக் கொண்டிருந்தார். 2012ம் ஆண்டு  அவரை பள்ளிக்கு செல்லக் கூடாது என்று வழிமறித்து தலிபான் தீவிரவாதிகள்  அச்சுறுத்தினர். இருந்தும், மலாலா மாணவியாக இருந்த போது, தலிபான்களின்  உத்தரவுக்கு இணங்காமல் பள்ளிக்கு ெசல்வேன் என்று தைரியமாக கூறினார்.  அதனால், மலாலாவை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில், அவருக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பின்னர்,  பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையே, உலகின் உயரிய விருதான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. அமைதிக்கான விருதாக, இவ்விருது வழங்கப்பட்டது. சர்வதேச புகழ்பெற்ற மாணவியாக உருவெடுத்த மலாலா, தொடர்ந்து பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அவ்வப்போது குரல்களை எழுப்பி வருவார். ஆப்கான் சம்பவங்கள் தொடர்பாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் தனது கவலைகளை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால்,  அங்கு வாழும் பெண்கள் மேலும் துன்பங்களை அனுபவிப்பர். கடந்த ஒன்பது  ஆண்டுகளுக்கு பிறகும் நான் மீளவில்லை. ஆப்கானிஸ்தான் மக்கள் கடந்த 40  ஆண்டுகளாக லட்சக்கணக்கான தோட்டாக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவி  கேட்பவர்களை பார்த்து, என் இதயம் ஏங்குகிறது.

ஆனால் அவர்களுக்கு என்னால்  உதவ முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை’ என்று கவலையுடன்  தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் மலாலா அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9 ஆண்டுக்கு முன் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதால், அவருக்கு முக முடக்கவாத பாதிப்பு இருந்தது. தற்போது, அதனால் இணை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால், முக முடக்கு வாத அறுவை சிகிச்சைக்காக மலாலா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை மருத்துவர்கள் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி



  • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி



  • 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி



  • பெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற!- ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு



  • 4 கார்கள் நிறைய பணத்துடன் ஹெலிகாப்டரில் தப்பிய ஆப்கான் அதிபர் ஓமன் நாட்டில் தஞ்சம்?.. ரஷ்யா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்



  • 129 இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற இந்திய விமானம் காபூலில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?



  • வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் பயங்கர நிலநடுக்கம்; 304 பேர் பலி: 2,000க்கும் மேற்பட்டோர் படுகாயம்; மீட்புப் பணிகள் தீவிரம்



  • பல ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி; தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவராக அறிவிப்பு: லண்டன் நீதிமன்றம் அதிரடி



  • இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தம்பதியர் படையெடுப்பால் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியது உக்ரைன்



  • 44 நாடுகளில் பரவியது `பி1.617’ வகை உருமாறிய வைரஸ்; இந்தியாவில் கொரோனாவால் 7.5 லட்சம் பேர் பலி?.. இறப்பை குறைத்து காட்டுவதாக வாஷிங்டன் பல்கலை ‘ரிப்போர்ட்’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]