இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சென்னை பொறியாளரை கொன்ற விவகாரம்; ‘சயனைடு’ வழக்கில் ஐகோர்ட் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி

8/25/2021 5:03:28 PM
பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல் செப்டம்பர் மாதத்தில் 100 சதவீதம் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

புதுடெல்லி: சென்னை கம்ப்யூட்டர் பொறியாளரை சோடியம் சைனைடு கொடுத்து கொலை செய்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் இவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு படித்திருந்தனர். அவர்களுக்கு வேலை கிடைக்காததால், அதேபகுதியை சேர்ந்த வேலன் மற்றும் அவரது பெண் நண்பர் பாரதியை சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும், கார்த்திக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றுள்ளனர்.

ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. கார்த்திக் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. சில மாதங்கள் கழித்து, பணி நியமன ஆணை வந்துள்ளதாக கூறி கார்த்திக் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோரை, அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து, கோயில் பிரசாதம் எனக்கூறி ஏதோ ஒன்றை இருவருக்கும் கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கார்த்திக், சோடியம் சயனைடு கொடுத்து கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், வேலன் மற்றும் பாரதி மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாரதியை விடுவித்தது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கார்த்திக்கின் மனைவி சரண்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் மற்றும் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதில், ‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கார்த்திக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய வேலன், அவரது நண்பரான பாரதியை அறிமுகம் செய்து இருந்தாலும், அவருக்கும் அனைத்து விபரங்களும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவரும் இந்த வழக்கில் குற்றவாளிதான். எனவே, இதுதொடர்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சில
  • இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி: தினசரி தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு



  • நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50% பேருக்கு முதல் டோஸ்: ஒரே நாளில் 496 பேர் பலி



  • சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 3 பெண்கள் உட்பட ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின் பதவியேற்பு



  • ஒன்றிய நிதியமைச்சக அறிவிப்பின்படி தமிழகத்தில் குத்தகைக்கு விடப்படும் அரசின் சொத்துகள் எவை?.. 4 விமான நிலையம், 491 கி.மீ. சாலை அடங்கும்



  • ஒரே ஆண்டில் 43,000 போக்சோ வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்



  • மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஓபிசி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்: ஒன்றிய அரசிதழிலும் வெளியீடு



  • உச்சநீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகள்; 2027ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்?.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பெயரும் பரிந்துரை



  • மோடியின் செல்வாக்கு ஓராண்டில் 42% சரிந்தது; நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர் மு.க.ஸ்டாலின்: தனியார் செய்தி நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல்



  • நாடு முழுவதும் இன்று காலை முதல் அமல்; காஸ் சிலிண்டர் விலை ரூ25 அதிகரிப்பு: சென்னையில் ரூ875.50க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி



  • ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்; ‘பெகாசஸ்’ உளவு குறித்து விசாரிக்க வல்லுனர் குழு: சுப்ரீம்கோர்ட்டில் ஒன்றிய அரசு பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]