இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: எடப்பாடியில் இபிஎஸ், தேனியில் ஓபிஎஸ் பங்கேற்பு

7/28/2021 5:07:28 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் தங்கள் வீடுகளின் முன் பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு  முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எடப்பாடியில் இபிஎஸ், தேனியில் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை, திமுக அரசின் கவனத்திற்கு கொண்டுவர வருகின்ற 28ம் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் அதிமுகவினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில்  தங்கள் வீடுகளின் முன் பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமை குரல்களாய் ஒலிக்க வேண்டும் என்று கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில், தங்கள் வீடு முன் பதாகைகள் மற்றும் அதிமுக கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அவரது வீட்டில் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோன்று முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கையில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி இன்று காலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக சார்பில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரச்சாரம் செய்தார்கள். திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக இப்போது நீட் தேர்வுக்கு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

மக்களின் எதிர்பார்ப்பை உடனடியாக நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலையை ரூ.5ம், டீசல் விலையை ரூ.4ம் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 தருவதாகவும் வாக்குறுதி அளித்தது. இதுபோன்று 55 வாக்குறுதிகள் திமுக சார்பில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்டது. அவைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் சில
  • 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்



  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]