இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முன்னாள் முதல்வர்களான இபிஎஸ்- ஓபிஎஸ்சை பிரதமர் மோடி காக்க வைத்தாரா?.. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விளக்கம்

7/27/2021 5:07:07 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முன்னாள் முதல்வர்களான இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோரை பிரதமர் மோடி தன்னை சந்திக்க வந்த போது காக்க வைத்தாரா? என்ற கேள்விக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 6வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக பாஜ சார்பில் கமலாலயத்தில் அவரது நினைவை போற்றும் வகையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அப்துல்கலாமின் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமரை டெல்லியில் சந்தித்து பேசினோம். அவர் எங்களிடம் இனிமையாக நிறைய விஷயங்களை பேசினார். ஒரு கூட்டணி மிக சிறப்பாக இருக்கிறது என்பதற்கு இதைவிட வெளிப்படையாக நமது எதிரிகட்சிகளுக்கு சொல்ல முடியாது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு பண்ணியிருக்கிறார்கள். சார்ஜ் பண்ணியிருக்கிறார்கள். அதுபற்றி சில விஷயங்களை லஞ்ச ஒழிப்பு துறை சொல்லியிருக்கிறார்கள். 

அனைத்துக்கும் நீதிமன்றம் இருக்கிறது. நீதிமன்றம் நடுநிலையாக இருக்கும். நீதிமன்றம் நல்ல ஒரு முடிவு எடுக்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ரெய்டு பண்ணியிருந்தார்கள் என்றால் அந்த வழக்கு நிற்காது. அதே சமயத்தில் இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்துள்ளனர். என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடியவர்கள் அவ்வப்போது பிரதமரை சந்திப்பது வழக்கம் தான். அது புதுசு கிடையாது. நிறைய முறை பிரதமர் இங்கு வந்திருந்த போது கூட சந்தித்தார்கள். தேர்தல் முடிந்து முதன் முறையாக, பிரதமர் இங்கு வர முடியாததால் டெல்லி போய் பார்த்துள்ளனர். 

இதில் அரசியலாக பார்த்தார்கள் என்றெல்லாம் கிடையாது. முன்னாள் முதல்வர்களான இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் நீண்ட நேரம் காத்திருந்து பிரதமரை சந்தித்ததாக கேட்கிறீர்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் எல்லாருக்கும் தெரியும். பிற்பகல் 11.15 மணி முதல் 11.25 மணி வரை சந்தித்தனர். நாடாளுமன்றத்தில் அந்த பிசியான நேரத்தில் கூட நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் அவர்களை பார்த்திருக்கிறார். சரியான நேரம் கொடுத்து, சரியான நேரத்தில் அவர்களும் வந்து பார்த்தனர். அவர்களை காக்க வைக்க வேண்டிய எந்த அவசியமும் பிரதமருக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்



  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]