இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அவசர ஆலோசனை

7/27/2021 5:04:26 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதேநேரம், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 

இதுகுறித்த அறிவிப்பு, கடந்த மாதம் நடைபெற்ற கவர்னர் உரையிலும் இடம் பெற்றிருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு முன் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வார். தமிழகத்தில் தற்போது 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்துவது மற்றும் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கவும் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட இருக்கிறது.

மேலும் சில
  • 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்



  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]