இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது

7/26/2021 5:29:32 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் இன்று காலை  தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வந்தனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 10,906 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ம் தேதி நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கான முடிவுகள் சீருடை பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

அதைதொடர்ந்து உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சாரிபார்ப்பு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக உடல் தகுதி தேர்வு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து உடல் தகுதி தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 20 இடங்களில் தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் இன்று காலை முதலே ஆர்வமாக அந்தந்த மையங்களுக்கு வந்தனர். சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள அனைத்து அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து, உடல் தகுதி, உடல் அளவு தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைவரது கொரோனா பரிசோதனை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 

மேலும், செல்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. சென்னையை பொறுத்தவரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. அதற்கான முழு ஏற்பாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்



  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]