இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

எடப்பாடியுடன் மோதல் எதிரொலி; மோடியுடன் ஓபிஎஸ் நாளை சந்திப்பு

7/25/2021 5:08:36 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

* உட்கட்சி பிரச்னை குறித்து பேசுகிறார்
* அமித்ஷா, ஜே.பி.நட்டாவையும் சந்திக்க முடிவு

சென்னை: எடப்பாடியுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ஓ.பி.எஸ். இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது உட்கட்சி பிரச்னை தொடர்பாக  பேசுவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் ஓ.பி.எஸ். சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். ஓபிஎஸ்ஸின் திடீர் டெல்லி பயணம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொது செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார். சசிகலா தன்னை முதல்வராக்க வேண்டும் என்று போர்க்கொடி எழுந்ததால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேறினார். தொடர்ந்து போட்டி அதிமுகவாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. மேலும் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியை வழிநடத்தும் வகையில் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் முதல்வர் இபிஎஸ்க்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. முதல்வராக இருந்ததால் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி கொண்டு வந்தார். எடப்பாடியுடன் இருந்தால் தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்து விடலாம் என்று கட்சியின் நிர்வாகிகள் அவருடனே இருந்து வந்தனர். ஓ.பி.எஸ்.க்கு துணை முதல்வர் பதவியும் முக்கிய இலாகாக்களும் ஒதுக்கப்பட்டதால் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருந்து வந்தார். முழுமையாக ஆட்சியையும், கட்சியையும் சுமார் 4 ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி வைத்திருந்தார். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் கடும் போட்டி நிலவியது. இரண்டு பேரும் தனக்கு தான் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு கடுமையாக மோதினர். இரண்டு பேரும் முதல்வர் வேட்பாளர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வந்தனர். இதனால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள் சமாதானத்தை அடுத்து கடைசியில் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளர் பதவி வேண்டாம் என்று அறிவித்தார். எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அதிமுக தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக தோல்வியடைந்தது. திமுக ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக எதிர்க்கட்சியானது.

இதனால், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே பிரச்னை ஏற்பட்டது. கடைசியில் எடப்பாடி எதிர்க்கட்சி தலைவரானார். ஓபிஎஸ்க்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.  அதே நேரத்தில் கட்சியில் இருந்து ஓ.பி.எஸ்.ஸை ஓரம் கட்டும் முயற்சியும் நடந்து வந்தது. இந்த நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால், தேர்தலை சந்திக்க ஓ.பி.எஸ், இபிஎஸ் இரண்டு பேரும் தயாராகி வருகின்றனர். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். தான் பொது செயலாளராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பணியாற்றி வருகிறாார்.

இதற்காக எடப்பாடி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனால், ஓபிஎஸ் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். அதே நேரத்தில் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வந்தால் மீண்டும் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் நினைக்கின்றனர். இதனால், இரண்டு பேரும் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று பொது செயலாளர் பதவியை பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றனர். அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் சேருவதற்கும், சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதற்கும் ஓபிஎஸ்க்கு பிரதமர் மோடி தான் ஆதரவாக இருந்து வந்தார். இந்த நிலையில் ஓ.பிஎஸ்.

இன்று காலை 10.50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மருமகன் காசி விஸ்வநாதன் சென்றார். மேலும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் நேற்றே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார். டெல்லி சென்ற ஓபிஎஸ் தமிழ்நாடு இல்லத்தில் தங்காமல், தனது மகன் ரவீந்திரநாத்தின் எம்பி இல்லத்தில் தங்கினார். தொடர்ந்து நாளை காலை 10.30 மணியளவில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது அதிமுக உட்கட்சி பிரச்னை தொடர்பாக பேசுவார் என்று கூறப்படுகிறது. மேலும் எடப்பாடியின் நடவடிக்கை குறித்தும் பேச ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து முதல் முறையாக ஓ.பி.எஸ். பிரதமரை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இதனால் ஓபிஎஸ்-பிரதமர் மோடி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஓபிஎஸ் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



  • 5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!



  • தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]