இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மாமல்லபுரம் அருகே சாலை விபத்து: நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்; பெண் இன்ஜினியர் பரிதாப பலி

7/25/2021 5:06:04 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் கால் எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார். அவருடன் சென்ற அமெரிக்க பெண் இன்ஜினியர் பரிதாபமாக இறந்தார். தமிழில்துருவங்கள் 16, ஜாம்பி, கவலை வேண்டாம், கழுகு2  உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது தோழியான ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த வந்திசெட்டி பவானி (26) மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன்  நேற்று புதுச்சேரிக்கு ஒரே காரில் சென்றுள்ளனர். காரை யாஷிகா ஓட்டினார்.  பின்னர், அங்கிருந்து இரவு 11.30 மணி அளவில் இசிஆர் சாலை வழியாக சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள (சென்டர் மீடியன்) தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வந்திசெட்டி பவானி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நடிகை யாஷிகாஆனந்த்துக்கு காலில் எலும்பு முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன், வந்த 2 ஆண் நண்பர்கள் லேசான காயங்களுடன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் வரும்போது 4 பேரும் பாடல் போட்டு டான்ஸ் ஆடி வந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து, பலியான பவானியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தில் பலியான பவானி அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து வந்த வந்திசெட்டி பவானி இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்து தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், காரை அதிவேகமாக ஓட்டுதல், அஜாக்கிரதையாக ஓட்டுவது, உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் போலீசார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



  • 5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!



  • தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]