இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்

7/24/2021 5:00:27 PM
அரசு வேலை வாங்கி தருவதாக 28 கோடி ரூபாய் மோசடி: எடப்பாடி பிஏ மீது வழக்கு 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

டோக்கியோ: பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டின் பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்துள்ளார். டோக்கியோவில் நேற்று  ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இன்று காலை தொடங்கிய துப்பாக்கிச்சுடுதல், பேட்மின்டன், வில்வித்தை ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய வீரர்,  வீராங்கனைகள் தொடர்ந்து தோற்று ஏமாற்றத்தை அளித்தனர். வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய தீபா குமாரி ஜோடியும் தோற்றுப்போனது.

இந்நிலையில் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு சைகோம்(26)) பங்கேற்றார். அவர் ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச்சில் 87கிலோ கிளீன் அன்டு ஜெர்க்கில் 115 கிலோ தூக்கினார். மொத்தம் 202கிலோ தூக்கி பட்டியலில் 2வது இடம் பிடித்தார்.  அதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். சீனாவின் ஹு ஜீஹுயீ  மொத்தமாக 219கிலோ தூக்கி தங்கம் வென்றார். இந்தோனேஷியாவின் அய்ஷ் விண்டி  194கிலோ தூக்கி  வெண்கலத்தை கைப்பற்றினார்.

மீராபாய் மூலம் இந்தியா முதல் பதக்கத்தை வென்றதுடன் பதக்கப்பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்த மீராபாய் சானு சைகோம்  சமீபத்தில்  தாஷ்கண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் 49கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். ஏற்கனவே 2016ம் ஆண்டு நடந்த ரியோ  ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார். ஆனால் அடுத்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 48கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.

கூடவே ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை  மீராபாய் பெற்றுள்ளார். ஆனால் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற  பெருமையும் மீராபாயை தான் சேரும்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து
 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ேபஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: ஒலிம்பிக்கில் முதல் நாளில் இந்தியாவுக்கு ஜொலிக்கும் ஆரம்பம். தன் மனதை கவர்ந்த செயலாக்கத்தால் இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை பளு தூக்குவதில் கொண்டு வந்த மீரா பாய் சானு சைகோம்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் சில
  • டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்



  • கேகேஆரை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி



  • பைனலில் கேகேஆருடன் இன்று பலப்பரீட்சை: கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: மகுடம் சூடும் அணிக்கு 10 கோடி பரிசு



  • இன்று குவாலிபயர் 2 போட்டி: கொல்கத்தா பவுலிங்கை சமாளிக்குமா டெல்லி?



  • இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட் ஓவலில் நாளை தொடக்கம்: அஸ்வினுக்கு இடம்



  • டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இன்று ஒரே நாளில் 4 பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்: வட்டு, ஈட்டி எறிதலில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம்



  • பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்



  • நீதிமன்ற உத்தரவால் தடகள போட்டியில் பங்கேற்க போலந்து செல்கிறார் குமரி மாணவி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் மகிழ்ச்சி



  • ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறி லவ்லினா அசத்தல்..! இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி



  • அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]