இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அவதூறு பேச்சு வழக்கில் தேடப்பட்ட பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது

7/24/2021 4:56:45 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

மதுரை: குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18ம்தேதி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவரும், குழித்துறை மறை மாவட்ட பனவிளை பங்கு தந்தையுமான ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதுடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோரையும் அவமதிப்பாக பேசியதாக பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.வினர் அருமனை போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் ஜார்ஜ் பொன்னையா, அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் மீது அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இந்த பிரச்னை தொடர்பாக ஜார்ஜ் பொன்னையா வெளியிட்ட வீடியோ பதிவில், அருமனையில் நடந்த கூட்டத்தில் நான் பேசிய பேச்சுகள் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனது உரையை திரித்து கூறி உள்ளனர். நானோ, என்னுடன் மேடையில் பேசியவர்களோ எந்த மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேச வில்லை.

ஒரு வேளை என்னுடைய பேச்சு மற்றும் பலருடைய பேச்சுகள் அவ்வாறு இந்து சகோதர, சகோதரிகளின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால், அதற்கு என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலங்களில் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த மாட்டோம் என்பதையும் நான் நேசிக்கும் இந்து சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி இருந்தார்.இதற்கிடையே நெல்ைல சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு நேற்று மாலை குமரி மாவட்டம் வந்தார். அதிரடிப்படையினருடன் மார்த்தாண்டம் காவல் நிலையம் சென்ற அவர், போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து காரில் பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரை நோக்கி வருவதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒத்தக்கடையில் அவரது காரை, ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவன் தலைமையிலான போலீசார் வழிமறித்தனர். கார் நிற்காமல் சென்றது. இதுகுறித்து சிலைமான் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிலைமான் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மதுரை ரிங் ரோட்டில் காத்திருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தனர். பின் அவரை விசாரணைக்காக கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று திருமங்கலம் டிஎஸ்பி வினோதினியிடம் ஒப்படைத்தனர்.இதைதொடர்ந்து கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான போலீசார் அவரை விசாரணைக்காக கன்னியாகுமரி அழைத்து சென்றனர்.

பாஜக ஆர்ப்பாட்டம்
ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவர் ஜார்ஜ் பொன்னையா கைதை தொடர்ந்து, அவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் கலெக்டர் அலுவலகம், புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகில்,  வில்லிவாக்கம் பேருந்து நிலையம் முன்பு என 3 இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் சில
  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



  • 5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!



  • தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]