இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

7/22/2021 5:10:48 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி: வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாய அமைப்புகள் இன்று போராட்டத்தை தொடங்கின. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த  தீர்வும் எட்டப்படாத நிலையில், இப்பிரச்னையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கிய நிலையில், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினமும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால், விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்ட களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றினர்.

அதன்படி, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தினமும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்தது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இன்றைய போராட்டத்துக்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து, பஸ்கள் மூலம் டெல்லி ஜந்தர் மந்தருக்கு இன்று காலை 10.30 மணிக்கு விவசாயிகள் வந்தனர். ஜந்தர் மந்தரில் உள்ள தேவாலயத்தின் பக்கத்தில் அமர்ந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளின் 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. போராட்ட களத்திற்கு வந்த அனைத்து விவசாயிகளின் அடையாள அட்டைகளை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.  

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, யுனைடெட் கிசான் மோர்ச்சா தலைவர்கள் கூறுகையில், ‘வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய குழுக்களும் டெல்லிக்கு வந்து பேராட்டத்தில் பங்கேற்கும். இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, போராட்டம் நடத்தப்படும். அதிகபட்சமாக 200 விவசாயிகள் மட்டும் கொரோனா விதிகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா நாளைய போராட்டத்தில் பங்கேற்பார்’ என்றார். இதுகுறித்து டெல்லியின் கூடுதல் டிசிபி அனிதா ராய் கூறுகையில், ‘டெல்லி செங்கோட்டையில் மூன்று ஷிப்ட்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டை வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் போன்ற தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 360 டிகிரி கண்காணிப்பு தவிர விமானப்படை, டிஆர்டிஓ, என்எஸ்ஜி ஆகியவற்றுடன் இணைந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

மேலும் சில
  • புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]