இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

16 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் அமீரகத்தில் அக். 17ல் தொடக்கம்: நவம்பர் 14ம் தேதி இறுதி போட்டி

6/26/2021 5:57:15 PM
லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி டிசம்பர் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றஎடப்பாடி-ஓபிஎஸ் பலப்பரீட்சை: அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு

துபாய்: 7வது டி.20 உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவியதால் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த மாதம் 29ம்தேதி ஐசிசி கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவில் உலக கோப்பை டி.20 தொடரை நடத்துவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ சார்பில் ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதன்படி ஜூன் 28ம்தேதி வரை ஐசிசி தரப்பில் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. கொரோனாவின் 3வது அலை அக்டோபர், நவம்பரில் வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் அக்டோபர், நவம்பரில் மழைக்காலம் என்பதால் உலக கோப்பை டி.20 தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொடர் நடந்தாலும் அதனை நடத்தும் உரிமை பிசிசிஐ வசமே இருக்கும்.

அக்டோபர் 17ம் தேதி உலக கோப்பை டி.20 தொடர் தொடங்க உள்ளது. 16 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிபோட்டி நவம்பர் 14ம்தேதி நடைபெற உள்ளது. தகுதி சுற்றில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓபன், பப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும். இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றில் 30 போட்டிகள் உள்ளன. இந்த சுற்று அக்டோபர் 24ம் தேதி தொடங்க உள்ளது. 6 அணிகள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

இந்த போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற உள்ளன. சூப்பர் 12 சுற்றில், ஏ மற்றும் பி குழுவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். தகுதி சுற்றில் சில போட்டிகள் ஓமனில் நடைபெற உள்ளது. போட்டிகள் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த 2 நாட்களில் உலக கோப்பை டி.20 தொடர் தொடங்க உள்ளது.

மேலும் சில
  • டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்



  • கேகேஆரை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி



  • பைனலில் கேகேஆருடன் இன்று பலப்பரீட்சை: கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: மகுடம் சூடும் அணிக்கு 10 கோடி பரிசு



  • இன்று குவாலிபயர் 2 போட்டி: கொல்கத்தா பவுலிங்கை சமாளிக்குமா டெல்லி?



  • இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட் ஓவலில் நாளை தொடக்கம்: அஸ்வினுக்கு இடம்



  • டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இன்று ஒரே நாளில் 4 பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்: வட்டு, ஈட்டி எறிதலில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம்



  • பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்



  • நீதிமன்ற உத்தரவால் தடகள போட்டியில் பங்கேற்க போலந்து செல்கிறார் குமரி மாணவி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் மகிழ்ச்சி



  • ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறி லவ்லினா அசத்தல்..! இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி



  • அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]