இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி: தமிழக அரசின் நடைமுறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும்: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பேட்டி

6/13/2021 5:30:10 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மும்பை: கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையைப் போல்  நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூறினார். பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார். இவர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கொரோனா ஊரடங்கு இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உணவளிக்க வேண்டும். அதேநேரம் பொருளாதாரத்தை மீட்பதும் அவசியம். தமிழக அரசைப் போன்று, நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ கார்டு திட்டத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு பிரச்னை உள்ளது. எனவே, அனைவருக்கும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் முறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பல லட்சம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். பொருளாாதார வசதி படைத்தவர்கள் செலவு செய்யாததால் பொருளாதாரத்தின் சுழற்சி முடக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களுக்கு குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகையை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அவர்கள் பணத்தை செலவிடுவார்கள். இதனால், தேங்கி நிற்கும் பொருளாதாரத்தை துரிதப்படுத்த முடியும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில், ஊரடங்கு மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது ஊரடங்கை கடுமையாக்கி இருக்க வேண்டியதில்லை.

கொரோனா பரவல் அதிகமாக இருக்கும்போதுதான் ஊரடங்கு தேவைப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எப்படி குறைந்தது என்பது புரியவில்லை. அதனால், கடந்த ஜனவரியில் கொரோனா பரவல் முடிந்துவிட்டதாக மக்கள் நினைத்தனர். அதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தல்களும், பண்டிகைகளும் மற்றொரு அலையை ஏற்படுத்தின. இன்றும், மூன்றாவது அலை எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. ஆனால் இரண்டாவது அலையிலிருந்து பெற்ற பாடங்களின் அடிப்படையில், மூன்றாவது அலைக்கு மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகிறது.

மகாராஷ்டிராவில் தேர்தலோ, கும்பமேளாவோ இல்லை என்றாலும் அங்கு நிலைமை மோசமாக இருந்தது. இருப்பினும், கொரோனா போரில் மகாராஷ்டிரா சரியான திசையில் சென்று கொண்டுள்ளது. தடுப்பூசி விஷயத்தை பொறுத்தமட்டில், வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படுமா? என்பது சந்தேகமாக உள்ளது. தடுப்பூசி விநியோகம் செய்யும்  நிறுவனங்கள், இதுபோன்ற எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தடுப்பூசி எவ்வளவு இருப்பு உள்ளது; அதனை எவ்வளவு காலகட்டத்திற்குள் போடுவது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் சில
  • புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]