இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

44 நாடுகளில் பரவியது `பி1.617’ வகை உருமாறிய வைரஸ்; இந்தியாவில் கொரோனாவால் 7.5 லட்சம் பேர் பலி?.. இறப்பை குறைத்து காட்டுவதாக வாஷிங்டன் பல்கலை ‘ரிப்போர்ட்’

5/17/2021 5:39:16 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

வாஷிங்டன்: தடுப்பூசி விஷயத்தில் இந்திய அரசு அலட்சியமாக செயல்பட்டதால், 44 நாடுகளில் இந்தியாவில் உருமாறிய `பி1.617’ வகை வைரஸ் புகுந்துள்ளது. இந்தியாவில் பலியானோரின் உண்மையான எண்ணிக்கை 7.5 லட்சமாக இருக்கும் என்று ஹெல்த் மேட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்தும், தினசரி இறப்பு 4 ஆயிரத்தை தாண்டியும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், உலகளாவிய சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ‘பி1.617’ வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார கல்வி மையத்தின் துணை இயக்குநர் அமிதா குப்தா கூறுகையில், ‘இந்தியாவில் 0.1% பாசிடிவ் மாதிரிகள் மட்டுமே மரபணு மாற்றப்பட்டதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன’ என்றார். மேலும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பேராசிரியர் பினா அகர்வால் கூறுகையில், ‘தடுப்பூசிகள் மற்றும் மருந்துவ முறைகளை கையாள்வதில் நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வால் தொற்றுநோய் பரவல் மீண்டும் தலைதூக்கி வருகிறது.

இந்திய அரசு போதுமான தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவும், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தவும் தவறிவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்கா பல மாதங்களாக நிறுத்தியது. இருப்பினும், இப்போது ஜனாதிபதி ஜோ பிடன் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் அலை ஏற்பட்ட காலகட்டத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தனர். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையில் மோசமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையை காட்டிலும் இந்தியாவின் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.

இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய ‘பி1.617’ வகை வைரஸ் வகைகள் அமெரிக்கா, ஐரோப்பா, நேபாளம், அங்கோலா, ருவாண்டா, மொராக்கோ உட்பட 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’ என்றார். கொரோனா வைரஸ் வேகமாக பரவும் உண்மையான வரைபடத்தை இந்தியா இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மே மாதத்தில் பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் தொற்று வேகமாக பரவுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மேட்ரிக்ஸ் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்.

இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. மொத்த இறப்பு எண்ணிக்கை 2.74 லட்சம் என்று அரசின் புள்ளி விபரம் கூறினாலும் கூட, சரியான எண்ணிக்கை 7.5 லட்சமாக இருக்க வாய்ப்புள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இறப்பு எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாக (15 லட்சம்) அதிகரிக்கும்’ என, அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் வூகானிலிருந்து 2019 நவம்பரில் இருந்து பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் `பி1.617 வகை’ வைரஸ் கிருமியாக மாற்றமடைந்து வேகமெடுத்துப் பரவிவருகிறது. உருமாற்றம் அடைந்திருக்கும் இந்த `பி1.617’ வகை வைரஸின் வீரியமும் பரவும் தன்மையும் முதல் அலையைவிடப் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இதுவரை பி1.617, பி1.617.2 வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், மிகப்பெரிய ஆபத்தையும், தீவிரமான பரவலையும் தரக்கூடிய பிரிட்டனில் கண்டறியப்பட்ட ‘பி1.1.7’ வைரஸ்களும் இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • தமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு



  • குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பு: இன்று கமலா ஹாரிஸை சந்திக்கிறார்



  • பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு மாகாணம் மீது விமான தாக்குதல் நடத்தியது பாக்.: தேசிய எதிர்ப்பு முன்னணி கடும் கண்டனம்



  • பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்: துப்பாக்கிச்சூடு கொண்டாட்டத்தில் சிலர் பலி: சிறுவர்கள் உட்பட பலர் காயம்



  • இரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் ட்ரோன் தாக்குதல் வரை ரத்த களறிக்கு மத்தியில் ஆப்கானை விட்டு வெளியேறியது அமெரிக்கா



  • ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி



  • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி



  • பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி



  • 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி



  • பெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற!- ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]