இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதால் திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை

4/15/2021 5:32:57 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

புழல்: புழல் புனித அந்தோணியார் நகர் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர் - ஈஸ்வரி தம்பதியரின் மகன் லோகுபிரபாகரன் (33). தனியார் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்தியா (31) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சந்தியாக (இரண்டு மாதம்) கர்ப்பமடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் சந்தியாவுக்கு காபி கொடுப்பதற்காக மாமியார் ஈஸ்வரி கதவைத் தட்டியபோது நீண்டநேரமாகியும் திறக்காததால், கணவர் சேகரிடம் கூறினார். விரைந்து வந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கே சந்தியா புடவையால் மின்விசிறியில் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து கதவை உடைத்து சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக செங்குன்றம் அடுத்த முண்டியம்மன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சந்தியா இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில், குடும்ப சூழ்நிலை காரணமாக கணவர் லோகு பிரபாகரன் தற்போது குழந்தை வேண்டாம் என அடிக்கடி கூறிவந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கணவர் லோகு பிரபாகரனை போலீசார் நேற்று இரவு கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். திருமணமாகி மூன்று மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் சென்னை தண்டையார் பேட்டை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டி கொலை; தடுத்தவருக்கும் வெட்டு



  • சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டு 13 லாரிகளில் கடத்தப்பட்ட 4 டன் குட்கா மின்சாதன பொருட்கள் அதிரடி பறிமுதல்: அதிகாரிகளுடன் வடமாநில கும்பல் மோதல்



  • நாளை மறுநாள் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை



  • பப்ஜி விளையாட்டில் கோடி கணக்கில் சுருட்டல்: ஆபாசமாக பேசி சிறுமிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய யூ டியூப்பர் மதன் எங்கே?: பொறிவைத்து தேடும் தனிப்படை



  • வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்



  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]