இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!

4/8/2025 7:07:39 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக, அவர்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் வரும் 11ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் முதல் கட்ட தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இந்த முகாமில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 2ம் கட்ட தடுப்பூசி முகாமின் இணை நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவரிடம் சான்று பெற்று வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஏப். 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைவருக்கும் சிறப்பு முகாம்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 7 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 3 நாட்களுக்கு வேண்டிய தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசு இதை மறுத்துள்ளது. தடுப்பூசி விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வரும்நிலையில், வரும் 11ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பொது மற்றும் தனியார் தொழில் நிறுவன பணியிடங்களில் தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு  எழுதிய கடிதத்தில், ‘அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் பணியாற்றி வரும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அனைவரும் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர். அதனால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமும் பணியிடத்தில் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த தயாராக இருக்கும்படியும், அதற்கான ஆலோசனைகளை வழங்கும்படியும் கோரப்பட்டுள்ளது.

பணியிடத்தில் தடுப்பூசி போடுவதால், கொரோனா வைரஸ் பரவல் அபாயத்தை கட்டுப்படுத்த முடியும். சுமார் 100 பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில், தடுப்பூசி முகாம்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிக்கு அனைத்து மாநிலங்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இதற்கான சிறப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட பணிக்குழு செயல்படும். மாநகராட்சி ஆணையர் தலைமையில் நகர்ப்புற பணிக்குழு செயல்படும். இவர்கள் பணியாளர்கள் பணியிடங்களை தேர்வு செய்வார்கள். இதற்கான சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

தகுதியான மற்றும் விருப்பமுள்ள பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். அதேநேரம், பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட வெளியாட்கள் பொது மற்றும் தனியார் பணியிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்னர், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். ‘ஆன்-தி-ஸ்பாட்‘ முறையிலும் பதிவு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



  • பெண் கொரோனா நோயாளி மரணம்: மருத்துவமனைக்கு உறவினர்கள் தீவைப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]