இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

3/21/2021 5:14:09 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இஸ்லாமாபாத்: சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சீனா தயாரித்த ‘சினோஃபார்ம்’ என்ற கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போட்டுக் கொண்ட நிலையில், அடுத்த 2 நாட்களில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

68 வயதாகும் இம்ரான்கான் அடிக்கடி கூட்டங்கள், அலுவலக ரீதியான சந்திப்புகளில் அதிகாரிகளுடன் பங்கேற்று வந்தார். சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் முகக்கவசம் இன்றி புதிய வீட்டுவசதித் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வரும்நிலையில் இதுவரை 6.15 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,700 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் வேகமாகப் பரவி வருகிறது. இம்ரான்கானின் அரசியல் தொடர்பு உதவியாளர் ஷாபாஸ் கில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பிரதமருக்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லை.

தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். லேசான இருமல், காய்ச்சல் மட்டுமே இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவரது மனைவியும் நாட்டின் முதல் பெண்மணியுமான புஷ்ரா பீபிக்கும் கொரோனா பாசிடிவ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இதற்கிடையில், இந்திய பிரதமர் மோடி கொரோனா தொற்றில் இருந்து இம்ரான் கான் விரைவில் குணமடைய வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • தமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு



  • குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பு: இன்று கமலா ஹாரிஸை சந்திக்கிறார்



  • பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு மாகாணம் மீது விமான தாக்குதல் நடத்தியது பாக்.: தேசிய எதிர்ப்பு முன்னணி கடும் கண்டனம்



  • பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்: துப்பாக்கிச்சூடு கொண்டாட்டத்தில் சிலர் பலி: சிறுவர்கள் உட்பட பலர் காயம்



  • இரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் ட்ரோன் தாக்குதல் வரை ரத்த களறிக்கு மத்தியில் ஆப்கானை விட்டு வெளியேறியது அமெரிக்கா



  • ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி



  • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி



  • பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி



  • 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி



  • பெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற!- ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]