இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

3/7/2025 5:33:57 PM
கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

பூந்தமல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமையில்  மதுரவாயலில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: பாஜகவை தோற்கடிப்பது தமிழக மக்களின் கடமை, அதிமுக - பாஜக கூட்டணியை முறியடித்து தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். அடுத்து வரும் அரசு ஜனநாயகத்தை காக்க கூடிய அரசாக அமைய வேண்டும்.
மோடி அரசு பணக்காரர்களை மிகப் பெரிய சூப்பர் பணக்காரர்களாக ஆக்குகிறது. தனியார் மயத்தை நோக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது.  இந்தியாவில் ஒரு பணக்காரர் 1 மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாதித்து வருகிறார். ஆனால் இந்தியாவில் 40 சதவீத மக்களின் மாத வருமானம் வெறும் 3 ஆயிரமாக உள்ளது. மோடி செல்லும் இடங்களில் எல்லாம் சுய சார்பு இந்தியா என்று கூறி வருகிறார். அதாவது செல்ப் ரிலையன்ஸ் என்கிறார்.

செல்ப் என்றால் மோடி, ரிலையன்ஸ் என்றால் அம்பானி. இவர்கள் இருவரும் நன்றாக இருக்க சுய சார்பு என்கிறார்கள். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 100 நாட்கள் எட்டி உள்ளது. 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நியாயமான கோரிக்கைக்காக அன்னமிடும் விவசாயிகளுக்காக, அறவழியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு செய்தது என்ன? மதத்தை அடிப்படையாக வைத்து பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. பாட்டுப்பாடும் சூத்திரதாரி மோடி, அவரது பாட்டுக்கு பின் பாட்டு பாடுபவர்கள் பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும். தமிழகத்தில் பாஜக அதிமுக அணி முறியடிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற்று பாஜக அதிமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அதேபோல தமிழக சட்டசபைத் தேர்தலிலும் அந்த அணி தொடர வேண்டும். மிகப்பெரிய வெற்றி பெற்று இந்தியாவுக்கே தமிழகம் வழி காட்ட வேண்டும். இந்த வெற்றியின் மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவை, இந்திய குடியரசை, தேசத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில  செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், .பீம்ராவ், வாசுகி, சவுந்தரராஜன், சம்பத், தாமஸ், தண்டபானி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்



  • சென்னையில் வெளுத்து வாங்கியது: தீபாவளி வரை கனமழை தொடரும்



  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு



  • 586 நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் உற்சாகம்



  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் 30, 34 காசு உயர்வு: ஒரு மாதத்தில் பெட்ரோல் ரூ6.46 அதிகரிப்பு



  • கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலம் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்



  • தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்புக்கு பள்ளிகள் நாளை திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம் இனிப்பு, பூக்கள் கொடுத்து வரவேற்க ஏற்பாடு



  • காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்



  • தேவர் குருபூஜை விழா; பசும்பொன்னில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]