இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?

3/2/2025 6:26:22 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன், தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதிமுக சட்டசபை தேர்தலில் தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, பாஜகவுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், கூட்டணியில் உள்ள தேமுதிகவை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. இதற்கு அதிக தொகுதிகள் கேட்டதே காரணமாக கூறப்பட்டது. அதாவது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்த போது ஜெயலலிதா ஒதுக்கிய 41 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது தான் காரணம். இதில் இருந்து அவர்கள் இறங்கி வருவார்கள் என்று அதிமுக தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த நிலையில் கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது.

இந்த நிலையில் திடீரென அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 20 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தினார். அதற்கு அமைச்சர்கள், ‘‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தால் 14 தொகுதிகள். இல்லா விட்டால் 10 தொகுதிகள் என்று கூறினர். விரைவில் முடிவை அறிவியுங்கள் என்று சொல்லி விட்டு சென்றனர். அமைச்சர்களின் இந்த பேச்சை கேட்டு விஜயகாந்த் அதிர்ந்து போனார்.

இந்த நிலையில் தேமுதிக குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க வேண்டும். விஜயகாந்த் மகனுக்கு விருகம்பாக்கம் தொகுதியை ஒதுக்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் தர வேண்டும் என்று 3 கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது முதல்வர் 10 தொகுதிகள் தருகிறோம். ராஜ்யசபா எம்பி சீட் கொடுப்பது குறித்து தேர்தலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம். அதேபோல் விருகம்பாக்கம் தொகுதியை தருவதாக ஒப்புக்கொண்டார்.
 தேர்தல் செலவு தொடர்பாக அமைச்சர் தங்கமணியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேசினர்.

அப்போது தேமுதிகவினர் எதிர்ப்பார்த்ததை விட குறைவான தொகையை தேர்தல் செலவுக்கு தருவதாக அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. அவர் கூறிய தொகையை பார்த்து தேமுதிகவினர் அதிர்ந்து போயினர். இதனால் கேட்ட பணம் கிடைக்காததால் இறுதியான பதில் எதுவும் சொல்லாமல் சென்று விட்டனர். மீண்டும் நேற்று பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்தனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரவில்லை. இதனால் அதிமுக, தேமுதிக பேச்சுவார்த்தை ரத்தானது. இந்த நிலையில் தேமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி என்று தேமுதிகவின் கட்சி கொடியையும், நமது சின்னம் முரசு சின்னம்” என்றும் அதில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தேமுதிக தனித்து போட்டியிட போகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், அதிமுகவை மிரட்ட தான் இவ்வாறு பதிவிட்டதாக அதிமுகவில் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் தங்கமணி ேதமுதிகவினருடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதில் தேமுதிகவுக்கு வழங்கப்படும் சீட்டுக்கு ஏற்றார் போல் பணத்தை தேர்தல் செலவுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு அதிமுக ஒதுக்கும் பட்சத்தில் தேமுதிக சம்மதிக்கும் என்று கூறப்படுகிறது. டீல் பணியாத பட்சத்தில் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி



  • ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்



  • சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை



  • தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் கொரோனாவுக்கு பலி:



  • இந்திய கம்யூனிஸ்ட், பாஜ வேட்பாளர்களுக்கு கொரோனா



  • கொரோனா பாதிப்பு தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை



  • மேற்குவங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் 44 சட்டமன்ற தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு: மத்திய அமைச்சர் உட்பட 3 பாஜ எம்பிக்கள் போட்டி



  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: இரவு நேர ஊரடங்கு அறிவிக்கவும் திட்டம்



  • ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடு 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]