இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

2/24/2021 5:04:19 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் முதல்வர் பதவியை நாராயணசாமி  ராஜினாமா செய்தார். இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.  இதற்கான அரசாணை புதுச்சேரி அரசிதழிலில் தலைமை செயலரால் வெளியிடப்பட்டது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி நாளை (25ம் தேதி) புதுச்சேரி வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.20 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு மத்திய அமைச்சர்கள், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.வரவேற்பு நிகழ்ச்சிக்குபின் பிரதமர் மோடி கார் மூலமாக கோரிமேடு ஜிப்மர் ஆடிட்டோரியம் செல்கிறார். அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

விழா முடிந்து காரில் புறப்பட்டு, லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானத்தில் 12 மணிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பகல் 1.20 மணிக்கு ெஹலிகாப்டர் மூலம் அவர் மீண்டும் சென்னை செல்கிறார். முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தனியாக ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் கார் வந்து செல்லும் ஏர்போர்ட் சாலை, இசிஆர் ரோடு, காமராஜர் சாலை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்த மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர். பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து நாளை முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜிப்மர் ஆடிட்டோரியம், பொதுக்கூட்ட மேடை உள்ளிட்டவை முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவையில் 7 ஆயிரம் போலீசார் குவிப்பு
சென்னையில் இருந்து மதியம் 2.10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு 3.35 மணிக்கு வருகிறார். கோவை  கொடிசியா அரங்கத்தில் நெய்வேலி லிக்னைட் நிறுவனம், குடிநீர் வாரியம்,  நகராட்சி நிர்வாகம், மத்திய கப்பல் போக்குவரத்து துறை, மின்வாரிய  திட்டங்களை துவக்கி வைத்து பேசுகிறார். மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில்  நடக்கும் பா.ஜ. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை  நகருக்கு சீல் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று  முதல் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று  மேலும், 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். மண் தோண்டிய  இடங்களில் மெட்டல் டிடெக்டர், மைன்ஸ் ஸ்வீப்பர் கருவிகள் மூலமாக சோதனை  நடத்தப்பட்டு வருகிறது.

குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், வடிகால்  பகுதிகளிலும் கண்காணிப்பு கருவிகள், மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு  கண்டறியும் பிரிவினர் ேசாதனை நடத்தி வருகின்றனர். பொதுக்கூட்டம்  நடைபெறும் மேடை, ெகாடிசியா வளாகம் செல்லும் பகுதி மற்றும் அதன்  சுற்றுப்பகுதியில் உள்ள வணிக, வர்த்தக நிறுவனங்கள் போலீஸ் பாதுகாப்பு  எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரில் ஓட்டல், லாட்ஜ்களில் தங்கி உள்ள  நபர்கள், வாரண்ட் குற்றவாளிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின்  விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]