இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை

2/21/2021 6:29:54 PM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

புதுடெல்லி: வரும் 25ம் தேதி 5 மாநில தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதால், நாளை மறுநாள் தலைமை தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல்- மே மாதங்களில் தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான படைகளை அனுப்புவது குறித்து ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பேசினர். அதன்படி, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் 250க்கும் மேற்பட்ட கம்பெனி படைகளை அனுப்ப உள்துறை முடிவு செய்துள்ளது. இதில், சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ-திபத்தியன் எல்லை போலீசார், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், சாஸ்த்ரா ஷீமா பால் பிரிவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாதுகாப்புப் பணிக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படைப்  பிரிவு வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன. இந்த வீரர்கள் வரும் 25ம் தேதிக்குள் அந்தந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களில் ஆய்வுகளை முடித்த நிலையில், வரும் 23ம் தேதி (நாளை மறுநாள்) டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது 5 மாநில தேர்தல் அட்டவணை தயாரிப்பு குறித்த முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று கூறப்படுகிறது. அதன்பின் வரும் 25ம் தேதி வாக்கில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகிகளுடன் மோடி ஆலோசனை
பாஜக சார்பில் பிரதமர் மோடி தலைமையில் 5 மாநில தேர்தல் குறித்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ெதாடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில், தேசிய தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், 5 மாநில தேர்தல் ெவற்றி குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை.

மேலும் சில
  • நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம்



  • உட்கட்சி பூசலால் பாஜ மேலிடம் அழுத்தம்; கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டபடி அறிவித்தார்



  • உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்



  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை



  • வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு



  • நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில் 24 மணி நேரத்தில் 3,998 பேர் பலி?.. ஒன்றிய அரசின் குளறுபடி தகவலால் அதிர்ச்சி



  • இந்தியாவில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு அரியானா சிறுவன் பலி: தேசிய வைராலஜி நிறுவன ஆய்வில் தகவல்



  • நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: மும்பை போலீசார் நள்ளிரவில் அதிரடி



  • ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது: எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை



  • ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]