இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி

1/26/2021 5:09:28 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

புதுடெல்லி: அமெரிக்காவின் கோவிட் -19 மாடர்னா தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஒப்புதல்  வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கின. மேலும்  மாடர்னா தடுப்பூசி 94.1 சதவீதம் பலன் அளிக்கிறது என்றும், மோசமான பக்க  விளைவுகள் இல்லை எனவும் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இந்தியாவில்  கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளை மக்களுக்கு செலுத்தும் பணி  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டாடா நிறுவனம் மாடர்னா மருந்தை  இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா குழுமத்தின் சுகாதாரப்பிரிவு, இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டாடா குழுமத்தின் அங்கமான டாடா மருத்துவ மற்றும் நோய் கண்டறியும் பிரிவு, இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் என தெரியவந்துள்ளது.

மாடர்னா தடுப்பூசியை குளிர்பதன பெட்டியில் சேமித்து வைக்க முடியும் என்பதால் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் சில
  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



  • 3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை: 19 நாளில் 13 முறை விலை உயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]